செய்திகள் :

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

post image

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தின் டீசர் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Love Oh Love - Movie Still
Love Oh Love - Movie Still

இங்கு கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், " பாரதிராஜா ஐயாவையும் ஆர்.பி. சௌத்ரி சாரையும் நினைவுல வணங்கிட்டு நான் பேசத் தொடங்குகிறேன்." என்று கூறிப் பேசத் தொடங்கியவர், "தனஞ்செயன் சாரை எனக்கு 25 வருஷமா தெரியும்.

என்னோட முதல் தயாரிப்பான 'தெனாலி' படத்துக்கு அவர்தான் ஆடியோவை முழுமையாக வெளியீடு பண்ணாரு. பல துறைகளில் கலக்குபவர் தனஞ்செயன்.

ஒருமுறை என் வீட்டுக்கு வந்து, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல உங்களை ஈசி மெம்பரா போட்டிருக்கோம் என்றார். நானும் முதலில் மறுத்துப் பார்த்தேன், பின்னர் சரி என்று விட்டேன்.

அப்போதுதான், 'நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன், நான் டைரக்டரை அனுப்புறேன். கதையில நீங்க ஹீரோவுக்கு அப்பாவா நடிக்கணும்' என்றார். நானும் சரி, கதை கேட்டுட்டுச் சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

இன்னொரு நாள் இந்த படத்தோட இயக்குநர் மகேஷ் வீட்டுக்கு வந்தாரு, ஹால்ல உக்காந்து கதை கேட்கத் தொடங்கினேன். டயலாக் எல்லாம் அனல் பறக்குற மாதிரி சத்தமா சொன்னாரு. வீட்ல வேலை பாத்துட்டு இருந்தவங்க, சமைச்சவங்க எல்லாரும் வந்து எட்டிப் பார்த்தாங்க.

கே.எஸ் ரவிக்குமார்
கே.எஸ் ரவிக்குமார்

மூன்றாவது மாடியில் இருந்து என் மனைவி வந்து, ஏதும் பிரச்சினையான்னு கேட்டாங்க. அந்தளவுக்குப் பயங்கரமா டயலாக் எல்லாம் பேசிக் காமிச்சாரு. மகேஷோட முதல் படம் மாதிரியே இல்லை.

அவர் வேலை செய்த விதமா இருக்கட்டும், மற்றவர்களை வேலை வாங்கின விதமா இருக்கட்டும், எல்லாமே சிறப்பா இருந்தது.

சில நேரங்கள்ல இந்த படத்தோட கதாநாயகன் பவிஷூடைய குரல் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும். பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது." என்றார்.

`விஜய் சார், இதைவிட பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்று...' - முதல்வரைச் சந்தித்த சமந்தா

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இன்... மேலும் பார்க்க

Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" - சென்னையில் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

"இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்..!" - நடிகை சமந்தாவின் புதிய பிசினஸ்

திரைப்பிரபலங்கள் பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தாண்டி இன்னும் பலர் பல்வேறு துறைகளில்... மேலும் பார்க்க

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார். பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்புப் புத்​தகங்​களை ரஜினி​காந்த்திற்... மேலும் பார்க்க

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' - தங்கம் தென்னரசு மகள் இமையா பதில்

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை... மேலும் பார்க்க

Habeebi: "அஜித் கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது!" - அனுபவம் பகிரும் டி.வி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீது

இஸ்லாமியர்களின் வாழ்வியலை முழுமையாகப் பேசும் தமிழ் படைப்பாக வெளிவந்திருக்கிறது மீரா கதிரவனின் 'ஹபீபி'. இந்தப் படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீதும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஊ... மேலும் பார்க்க