செய்திகள் :

Madhavan: `10 வாட்ச் மட்டுமே தயாரிப்பு; விலை.? - நடிகர் மாதவன் கட்டியிருந்த அரிதான வாட்ச்!

post image

இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவரான மாதவனுக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி நடந்த இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதை மாதவனுக்கு வழங்கி கௌரவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது மாதவனுடன் அவரது மனைவி சரிதா மற்றும் மகன் வேதாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

விருது வழங்கும் விழாவில் மாதவனின் பத்மஸ்ரீ அங்கீகாரம் முதன்மையாகப் பேசப்பட்டாலும், அவர் அணிந்திருந்த நேர்த்தியான ஆடையும், கையில் கட்டியிருந்த காஸ்ட்லி கடிகாரமும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழாவிற்கு மாதவன் ஃபிரேம் இல்லாத கண்ணாடி மற்றும் தங்கச் சங்கிலியுடன், பழுப்பு நிற லெதர் ஸ்ட்ராப் கொண்ட கடிகாரத்தையும் அவர் அணிந்திருந்தார்.

விருது பெரும் மாதவன்
விருது பெரும் மாதவன்

அவர் அணிந்திருந்த கடிகாரம் சாதாரணமானது அல்ல. அது இந்திய நிறுவனமான டைட்டன் தயாரித்த மிக அரிதான `Titan Nebula Jalsa Flying Tourbillon' ஆகும். 18 கேரட் Rose Gold உறை கொண்ட இந்த கடிகாரம், டைட்டனின் ஆடம்பர நெபுலா கலெக்ஷனின் கீழ் உருவாக்கப்பட்டது. ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற 'ஹவா மஹால்' கோட்டையினால் ஈர்க்கப்பட்டு, ராஜஸ்தானின் பாரம்பரிய நுண்கலை ஓவிய பாணியில் இதன் முகப்பு (Dial) கைகளால் வரையப்பட்டுள்ளது. உலகிலேயே வெறும் 10 கடிகாரங்கள் மட்டுமே இந்த மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த சொகுசு கடிகாரத்தின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.

விருது பெற்ற பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை மாதவன் பகிர்ந்துள்ளார். அதில், ``பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதில் நான் மிகவும் பணிவன்புடனும், நன்றியுடனும் இருக்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்குக் கிடைத்த பெருமை. எனக்கு இந்த விருதை வழங்கிய இந்திய அரசுக்கும், எனது பெயரைப் பரிந்துரைத்த மகாராஷ்டிர அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். என் படங்களைப் பார்த்து, என் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு, என் வெற்றிகளைக் கொண்டாடி, என் குறைகளை மன்னித்து, இத்தனை வருடங்களாக என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் இந்த விருது சமர்ப்பணம். இந்த அங்கீகாரம் எனக்குப் பெரிய பொறுப்புணர்வைத் தந்துள்ளது. நேர்மை, பணிவு மற்றும் சிறப்பான செயல்பாடுகளைத் தொடர இது நினைவூட்டுகிறது" எனக் கூறியுள்ளார்.

Larry Cat: 7-வது பிரதமருக்காகக் காத்திருக்கும் இங்கிலாந்துப் பூனை; சமூக ஊடகங்களில் வைரலாகும் லேர்ரி!

பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமர... மேலும் பார்க்க

`சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | Viral Video

இந்தியாவைச் சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற இந்து சாமியார் ஒருவர், தனது ஆன்மீக நேர்த்திக்கடனுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெள... மேலும் பார்க்க

நூறு சாமி: ``இக்கட்டான சூழ்நிலைகளில்..."- திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், படத் தயாரிப்பாளர் எனப் பல முகங்களுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படம் இன்று (ஜூன் 19) திரையரங... மேலும் பார்க்க

கும்பகோணம் தீ விபத்தின் கோரத்தை நேரில் கண்டவர், இன்று மதிப்புமிக்க பதவியில்- வாழ்த்திய ராதாகிருஷ்ணன்

2004-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளித் தீ விபத்தின்போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் 94 க... மேலும் பார்க்க

`சிங்கிள் பெட்ரூம் வீடு; அதுவும் சொந்தமில்லை' - டிரில்லியனரான எலான் மஸ்க்கின் சுவாரஸ்யப் பக்கம்!

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் பிரமாண்ட பங்குச் சந்தை அறிமுகத்தைத் (IPO) தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் 'டிரில்லியன் அதிபர்' (Trillionaire) என்ற வரலா... மேலும் பார்க்க

"இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதா?" - லண்டனில் தலைமை நீதிபதியிடம் கேள்வி!

லண்டனில் உள்ள பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில், கடந்த ஜூன் 4-ம் தேதி இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பிந்... மேலும் பார்க்க