செய்திகள் :

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர்; அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி

post image

மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுகளில் இயற்கையாக முளைக்கும் குறிப்பிட்ட சில காளான் வகைகளை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டு வருகின்றனர். நச்சுத்தன்மை வாய்ந்த போதை காளான்களால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், மரணம் வரை ஏற்பட்டாலும் அது குறித்து எந்தவித கவலையுமின்றி போதைக் காளான்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போதைக் காளான்களை பயன்படுத்தி வந்த ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்த போதை காளான்களை பறிமுதல் செய்தது, அவர்களை சிறையில் அடைந்திருக்கிறார்கள்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால் கைதான மாணவர்களில் ஒருவர், ஏற்கனவே போதை காளான்களை பயன்படுத்திய சம்பவத்தில் தன்னுடைய காதலி கண்முன்னே உயிரிழந்ததை நேரில் பார்த்தவர். அப்படியிருந்தும் போதை காளான்களை பயன்படுத்தி மீண்டும் காவல்துறையினரிடம் சிக்கியிருக்கிறார்.

போதை காளான்

இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி காவல்துறையினர், "‌ ஊட்டி பாம்பேகேஸில் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஆகாஷ், 2024-ம் ஆண்டு 19 வயது நர்சிங் கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில், இருவரும்‌ மது அருந்திவிட்டு போதைக் காளான் உட்கொண்டதில் அந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஆகாஷை கைது செய்தோம்.‌ ஜாமினில் வெளியில் வந்த ஆகாஷ், கல்லூரி நண்பர்களான இமானுவேல், தனுஷ், ஹரிஷ் சேர்ந்து மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று போதை காளான் சேகரித்து பயன்படுத்தியிருக்கிறார். நண்பர்களுடன் ஆகாஷை கைது செய்துள்ளோம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து வனத்துறை உதவியுடன் கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

வேறொரு பெண்ணுடன் திருமணம்; விபரீத முடிவெடுத்த காதலி - கூமாபட்டி இளைஞரை சிக்க வைத்த சிசுவின் DNA

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சேர்வாரன் என்பவரது மகள் ஈஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் கடந்த 2019ம் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னைய... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் ... மேலும் பார்க்க

`தந்தை வேலை எனக்குத்தான்.!' - அரசு வேலை, சொத்துக்காக தாயை கூலிப்படை மூலம் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா தனது 45 வயது தாய் நீரஜ் சர்மாவை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் கைது ச... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மனைவியைக் கொன்று காதலிக்கு போட்டோ அனுப்பிய இந்திய பொறியாளர் - 9 மாத நாடகம் முடிந்தது!

அமெரிக்க கனவு, காதல், திருமணம், துரோகம்... என ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் அத்தனை அம்சங்களும் அடங்கிய ஒரு கொடூர சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது திருமணம் மீறிய உறவு... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் சம்பந்தப்பட்ட பூட்டான் கார் கடத்தல் வழக்கு: மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது. சர்வதேச கும்பல், வரி செல... மேலும் பார்க்க