செய்திகள் :

Mamitha: "ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் இன்று..."- மமிதாவைப் புகழ்ந்த சூர்யா

post image

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

'விஸ்வநாத் & சன்ஸ்'
'விஸ்வநாத் & சன்ஸ்'

அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட். 12) ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பேசிய சூர்யா, "உங்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. அதாவது பணம், குடும்ப பின்புலம் என எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. உங்களுக்குத் திறமையில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் உங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்.

அப்படி நம்பினால் எல்லாமே நடக்கும். மமிதா அதைத்தான் செய்திருக்கிறார். அவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிறார்.

மேடியை உருவாக்கியதற்கு நன்றி, இந்தக் கதாபாத்திரத்தை எங்களது மனதில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறீர்கள் மமிதா" என்று பேசியிருக்கிறார்.

"டீஸர், ட்ரெய்லரைப் பார்த்தே முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; ஆனால்..."- விமர்சனங்கள் குறித்து மாதவன்

திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் பற்றி மாதவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜிடிஎன்’ (GDN). ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வ... மேலும் பார்க்க

சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்... 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் ரீ-கிரியேட் செய்த வெங்கி அட்லுரி!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க

`கருத்து வேறுபாடு, பட்ஜெட் பிரச்னைகளால் அருண்ராஜா காமராஜுடன் படம் இல்லை' - விஷ்ணு விஷால் அறிவிப்பு

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடன் நடித்துத் தயாரிக்க இருந்த திரைப்படம் கைவிடப்படுகிறது என்று நடிகர் மற்றும் இயக்குநர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."அருண்ராஜா காமராஜுடன் நான் இணையவிருக்க... மேலும் பார்க்க

"முதலில் நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன், ஏனென்றால்..!"- நடிகர் சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ... மேலும் பார்க்க

Karnataka SIR: "வாக்குரிமை நீக்கப்பட்ட வாக்காளர்களில் நானும் ஒருவன்" - வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்

கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிரு... மேலும் பார்க்க