செய்திகள் :

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

post image

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார்.

2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இவர் இயக்கியுள்ள இப்படத்தில், மம்மூட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்தும், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டியுடன் இணைந்தது குறித்தும் அடூர் கோபாலகிருஷ்ணன் 'இந்தியா டுடே' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Padayaatra - Movie
Padayaatra - Movie

அவர் பேசுகையில், "கொரோனா காலத்தில் திரையரங்குகளில் படம் வெளியாக முடியாத சூழலில் நாம் ஏன் புதிய திரைப்படங்களை உருவாக்க வேண்டும்?" என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதனால் சில காலம் படம் இயக்குவது பற்றி யோசிப்பதையே நிறுத்திவிட்டேன்.

ஆனால், மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வந்து படங்கள் பார்க்கத் தொடங்கியதும், எனது அடுத்த படைப்புக்கான திரைக்கதையை எழுதி இப்படத்தை இயக்கி முடித்துள்ளேன்.

ஒரு படத்தை இயக்கி முடித்தவுடன் அதிலிருந்து விடுபட்டு, மற்றொரு புதிய கதைக் களத்தைக் கண்டறிய எனக்கு எப்போதும் சில காலம் தேவைப்படும்.

திரைப்பட உருவாக்கத்திற்கு இடையே எடுத்துக்கொள்ளும் இத்தகைய இடைவெளிகள், எனது படைப்புகளை மீண்டும் சுயபரிசோதனை செய்துகொள்ள உதவுகின்றன.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்

இதற்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து 'அனந்தரம்' (1987), 'மதில்கள்' (1990) மற்றும் 'விதேயன்' (1994) ஆகிய 3 வெற்றிப் படங்களை உருவாக்கியுள்ளோம்.

தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த 'பாதயாத்ரா' திரைப்படம், எங்கள் கூட்டணியில் உருவான 4-வது திரைப்படமாகும். நான் இதுவரை இயக்கியுள்ள 13 திரைப்படங்களில் அதிக முறை நடித்த ஒரே நடிகர் மம்மூட்டிதான்.

எங்கள் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களுக்காக மம்மூட்டி தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதேபோன்று, இந்த திரைப்படத்திலும் அவரது நடிப்பு மிகவும் அபாரமாகவும் அசத்தலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை." எனப் பகிர்ந்திருக்கிறார்.

Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி

'கும்பளங்கி நைட்ஸ்', 'பீஷ்ம பர்வம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்... மேலும் பார்க்க

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்ப... மேலும் பார்க்க

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நிவின் ப... மேலும் பார்க்க