செய்திகள் :

Mani Sharma: "ஹார்மோனியத்தை தூடி தட்டி எடுத்தபோது.!" - கம்பேக் பற்றி பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா

post image

தமிழ், தெலுங்கு என பல ஹிட் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் மணி ஷர்மா. இன்றும், இவருடைய பாடல்கள்தான் பலருடைய ப்ளேலிஸ்டில் முக்கிய வைப் நம்பர்கள்.

Mani Sharma
Mani Sharma

டோலிவுட்டில் வெளிவந்த 'பேபி' திரைப்படத்தின் இயக்குநரான சாய் ராஜேஷ் இயக்கியிருக்கும் 'சென்னை லவ் ஸ்டோரி' படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அவருடைய கம்பேக் தருணம் பற்றி பேசியிருக்கிறார்.

அவர், "ஒருநாள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தேன். அப்போது சாய் ராஜேஷ் வந்து, ‘நான் ‘பேபி’ படத்தை இயக்கிய இயக்குநர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னிடம் என்ன வேலைக்காக வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை.

பிறகு நான் அவரிடம் ‘என் ஹார்மோனியம் எங்கே இருக்கிறது என்றே எனக்குத் தெரியாது’ என்று சிரித்தபடி சொன்னேன்.

Chennai Love Story
Chennai Love Story

ஆனால் அவர் விடாமல் தேடி, அதன் மீதிருந்த தூசியைத் துடைத்து, என் முன் கொண்டு வந்தார்.

ஒரு பாடலை இசையமைத்த பிறகு, இசை இன்னும் எனக்குள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியாக பல அழகான பாடல்களை உருவாக்கினேன்." என்றார்.

பைக்கர்: 18 வயது இளைஞனாக மாறிய 41 வயது நடிகர்; '2 ஆண்டுக்கால கடின உழைப்பு' - நடிகர் சர்வானந்த்

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், மோட்டோகிராஸ் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பைக்கர்'. இப்படத்திற்காக நடிகர் சர்வானந்த் மேற்கொண்ட அதிரடி உடல்மாற்றமும், அதன் பின்னணியில் உள்ள உழை... மேலும் பார்க்க

Peddi: "அப்போது சைவ உணவு மட்டுமே" - ராம் சரணின் மல்யுத்த வீரருக்கான உடலமைப்பிற்கு பின்னிருக்கும் கதை

ராம் சரண் நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ரிலீஸ் தேதியிலிருந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனப் பேசப்படுகிறது. அது... மேலும் பார்க்க

Chiranjeevi: "சூர்யா, கல்விக்காக செய்பவை எனக்கு ஊக்கமளிக்கின்றன!" - புதிய முயற்சியில் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத... மேலும் பார்க்க

Rashmika: 'நான் கடந்து வந்த பாதை நீண்டது..!' - மாநில விருதை பெற்ற ராஷ்மிகா நெகிழ்ச்சி

தெலங்கானா மாநில அரசின் 'Gaddar' திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது. இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார். ... மேலும் பார்க்க

"என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன், ஆனால் இன்று..!"- மாநில விருது வாங்கிய ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடன் நடிகர் தீக்சித் ஷ... மேலும் பார்க்க

Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" - மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படம் உருவாகியிர... மேலும் பார்க்க