Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டெ...
Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்!
இதுவரை உக்ரைன் போரினால் அமெரிக்காவும், ரஷ்யாவும் முட்டி மோதிக்கொண்டிருந்தன. இப்போது வெனிசுலா விஷயத்திலும் இந்த இரு நாடுகள் மோதிக்கொள்ள தொடங்கியுள்ளன.
என்ன பிரச்னை?
நேற்று கரீபியன் கடல், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கா. இந்த இரண்டு கப்பல்களும் முன்பு வெனிசுலாவிற்கு கீழ் இருந்து வந்தது.
இதனால், இந்தக் கப்பல்களில் வெனிசுலாவின் தடை செய்யப்பட்ட எண்ணெய் கொண்டுவரப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

மரினேரா
இரண்டு கப்பல்களில் மரினேரா என்கிற எண்ணெய் டேங்கர் கப்பலால் தான் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது.
முன்பு பெல்லா 1 என்று அழைக்கப்பட்ட மரினேரா கப்பல் கடந்த டிசம்பர் மாதம், ரஷ்யாவின் கீழ் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக, இந்தக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய போது, மரினேரா கப்பலில் ரஷ்ய கொடி பறந்துகொண்டிருந்தது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்போக்கை உண்டாக்கி உள்ளது.
மரினேரா கப்பலை அமெரிக்கா சட்டென கைப்பற்றிவிடவில்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக, அந்தக் கப்பலை அமெரிக்கா தொடர்ந்து ட்ரேக் செய்து வந்துள்ளது.
இதையறிந்த ரஷ்யா தங்களது கப்பல் படையால் அந்தக் கப்பலை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. இந்தப் பாதுகாப்பையும் மீறி அமெரிக்கா மரினேராவைக் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்கா என்ன சொல்கிறது?
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளைப் பிரிவு, "உலகம் எங்குமே வெனிசுலாவின் எண்ணெய்க்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதனால், அமெரிக்காவின் தடையை மீறிய இந்தக் கப்பல் ட்ரம்ப் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
Reuters செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, கப்பலைக் கைப்பற்றியதும் முதலில் எண்ணெய் டேங்கர் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தே, அமெரிக்காவின் நோக்கம் என்ன(எண்ணெய்)வென்று புரிந்துவிடுகிறது.

ரஷ்யாவின் எதிர்ப்பு
மரினேரா கைப்பற்றலைப் பற்றி ரஷ்யாவின் வெளியுறவுத் துறை, "அந்தக் கப்பலில் இருந்த அனைத்து ரஷ்ய குடிமகன்களும் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும்.
ஒரு நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பலை இன்னொரு நாடு கைப்பற்றுவதற்கு எந்த உரிமையும் இல்லை" என்று பதிவு செய்துள்ளது.
















