மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்" - அமைச்சர் சிவசங்கரை பார...
Mask: "ஆண்ட்ரியா எங்க ஸ்கூல் கல்சுரல்ஸ்லயே ஃபேமஸ்" - ஜிவி பிரகாஷ் பேச்சு
கவின் நடிப்பில் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஜிவி பிரகாஷ்குமார் ஆண்ட்ரியா உடன் ஒன்றாக அந்நியன் ஆல்பத்தில் பாடியதை நினைவுகூர்ந்து பேசினார்.

அவர், "இந்த படத்துக்குள்ள கடைசியாதான் நான் வந்தேன். ஆண்ட்ரியா முதன்முதலா இண்டஸ்ட்ரிகுள்ள வரும்போது, ஹாரிஸ் சார் மியூசிக்ல அந்நியன்ல பாடும்போது நானும் அங்க இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ப்ரே ஆல்பம்ல பாடினோம்.
ஸ்கூல் கல்சுரல்ஸ்லயே அவங்க ஃபேமஸ். எங்க ஸ்கூலுக்கும் அவங்க ஸ்கூலுக்கும் போட்டி இருக்கும். அப்ப இருந்தே அவங்களை தெரியும். அவங்களுக்கு இது சக்ஸஸ் ஃபுல்லான படமா இருக்கும்.
விக்கர்னன் இந்த கதையை சொல்லும்போது வெற்றிமாறனுக்கு தொடர்பு இல்லாம இருந்தது. இதை எப்படி தயாரிக்கிறீங்கன்னு கேட்டேன். இது ஒரு ஹெயிஸ்ட் படம்னு சொல்லலாம், நிறைய ஷேட்ஸ் இருக்கும். மியூசிக்கா நிறைய வேலை செஞ்சிருக்கோம்.
ஹீரோயின் ருஹானி துல்கர் சல்மான் உடன் ‘ஆகாஷம்லோ ஒக்க தாரா’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார், அதிலயும் நான் வேலை செஞ்சிருக்கேன்." எனப் பேசினார்.











