விழிப்புணர்வு முக்கியம்! - இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முற...
Mask: "வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம்" - நெல்சன் கலகல பேச்சு
கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் கவினை மனதார பராட்டிப் பேசினார்.
அவர், "மாஸ்க் ஐடியா பேசும்போது ரொம்ப குதர்கமா இருக்கும், இந்த ஐடியா யார் யோசிச்சதுன்னு கேட்டபோது விகர்னன்னு சொன்னாங்க. அவர் ஆளே ஒரு மாதிரிதான் இருக்கார்னு கவின் சொன்னான். அவர் மூஞ்சிய பாக்கணும்னு ரொம்ப ஆர்வம். ஒரு நாள் வெற்றிமாறன் சார் ஆபிஸ்ல பாத்தேன். இந்த மூஞ்சிக்கு எல்லா க்ரைமும் பொருத்தமா இருந்துச்சு.

விகர்னன் இந்தக் கதையை யோசிச்சது பெரிய விஷயம், அதை சொல்லி இவ்வளவு பெரிய டைரக்டர் (வெற்றி மாறன்) ஏமாத்தினது அதைவிட பெரிய விஷயம்." என இயக்குநரை கலாய்த்துப் பேசினார்.
தொடர்ந்து படம் குறித்து, "பொதுவா வெற்றிமாறன் சார் தயாரிக்கிற படங்கள் சமூக ரீதியிலானதாக இருக்கும். இந்த படத்தில் அது இருந்தாலும் ரொம்ப என்டெர்டெயினிங்கா இருந்தது.
முதலில் இந்த கதையைக் கேட்கும்போது கவினின் கதாப்பாத்திரமே கிரேவாக இருந்தது. வெற்றிமாறன் சார் அதையெல்லாம் சரி பண்ணியிருக்கார்னு நினைக்கிறேன். 3வது முறை கதை கேட்கும்போது ரொம்ப நல்லா இருந்தது. இந்த படம் புது அனுபவமா இருக்கும்." என்றார்.

முன்னதாக நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தில் நடித்திருந்தார் கவின்.
கவின் குறித்து பேசிய நெல்சன், "கவின் துணிச்சலா எக்ஸ்பெரிமென்டல் படங்களில் களமிறங்குகிறார். அடிவாங்கினாலும் வாங்குகிறார். சட்டையைத் திறந்துபார்த்தால் நிறைய காயங்கள் இருக்கும். இப்போது அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் 5, 10 வருஷம் கழிச்சு ரொம்ப நிலையான இடத்தில் இருப்பார்னு நினைக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அவரது நடிப்பும் மெச்சூரிட்டியும் நல்லா இருக்கு." என்றார்.
















