செய்திகள் :

Meta AI glasses: நாளைய தொழில்நுட்பமா... தனியுரிமைப் பிரச்னையா? விடை தேடுமா உலக நாடுகள்?

post image

Meta உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள AI Smart Glasses (செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகள்) உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் அதேவேளையில், பொதுமக்களின் தனியுரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியிருக்கின்றன. சாதாரணக் கண்ணாடியைப் போலவே தோற்றமளிக்கும் இந்த நவீனக் கண்ணாடிகள், குடிமக்களின் உரிமைகளைப் பறிக்குமோ என்ற அச்சம் உலகெங்கும் தீவிரமடைந்துள்ளது.

உடலமைப்பு மற்றும் பயன்பாடு:

சாதாரணக் கண்ணாடி போன்றே இருக்கும் இந்த AI Smart Glasses-ல், கேமரா, மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் (AI Assistant) ஆகியவை அடங்கியுள்ளன. குரல் கட்டளைகள் மூலம் நொடியில் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, இசை கேட்பது, நிகழ்நேர மொழிபெயர்ப்பு (Real-time translation) செய்வது என இதன் வசதிகள் நீள்கின்றன. Meta நிறுவனத்தின் Ray-Ban Smart Glasses உள்ளிட்ட தயாரிப்புகள் தற்போது உலக சந்தையை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றன.

தனியுரிமைச் சிக்கலும் அச்சமும்:

இந்தத் தொழில்நுட்பம் எழுப்பும் ஆகப்பெரிய கேள்வி... தனியுரிமை!

ஸ்மார்ட்போனைப் போல கையில் உயர்த்திப் பிடிக்காமல், இயல்பாகப் பேசிக்கொண்டோ அல்லது நடமாடிக்கொண்டோ யாருக்குத் தெரியாமலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும் என்பதே இதிலுள்ள பெரும் ஆபத்து.

குறிப்பாக, பெண்கள் மற்றும் பொதுஇடங்களின் தனியுரிமை எளிதில் கேள்விக்குறியாகலாம். எதிர்காலத்தில் இதனுடன் முகஅடையாளத் தொழில்நுட்பம் (Facial Recognition) முழுமையாக இணைக்கப்பட்டால், எதிரே நிற்பவர் யார், அவர் பற்றிய விவரங்கள் என்ன என்பதை நொடியில் மோப்பம் பிடிக்கும் சூழல் உருவாகும் என ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

தரவுப் பாதுகாப்பு (Data Privacy):

இந்தக் கண்ணாடிகள் மூலம் சேகரிக்கப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் அனைத்தும் AI சேவையகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அந்தத் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன, மூன்றாம் தரப்பினருக்குப் பகிரப்படுகிறதா, எவ்வளவு காலம் பாதுகாக்கப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு நிறுவனங்கள் இன்னும் முழுமையான பதிலளிக்கவில்லை.

எழுந்துள்ள எதிர்ப்புகளும் நடவடிக்கைகளும்:

• அமெரிக்காவில் ACLU, EPIC உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட சிவில் உரிமை அமைப்புகள், Meta நிறுவனத்திடம் முகஅடையாளத் தொழில்நுட்பத்தை Smart Glasses-ல் இணைக்கக் கூடாது எனத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளன.

• இங்கிலாந்து மற்றும் நியூயார்க் நீதிமன்றங்கள், நீதிமன்ற வளாகங்களுக்குள்ளும் விசாரணைக் களங்களிலும் Smart Glasses பயன்படுத்த தடை விதித்துள்ளன.

• உலகின் பல்வேறு கல்வி நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் தங்களுடைய வளாகங்களில் இந்தக் கண்ணாடிகளுக்குத் தடை விதித்துள்ளன.

நிறுவனங்களின் விளக்கம்:

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள Meta நிறுவனம், பதிவு செய்யும் போது கண்ணாடியில் உள்ள LED விளக்கு ஒளிரும் என்பதால் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்; பயனர்களின் பாதுகாப்பிற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; தற்போதைக்கு முகஅடையாள வசதி செயல்படுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

விடை தேடும் உலக நாடுகள்!

AI Smart Glasses பயன்பாட்டிற்கு தற்போது நேரடியான சட்டத் தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும், மிகவேகமான தொழில்நுட்ப வளர்ச்சியையும், குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதே உலக நாடுகள் முன் உள்ள இப்போதைய சவாலாகும். AI அடுத்த கட்டத்திற்கு நகரும் நிலையில், அதற்கேற்ப கடுமையான சட்டங்களும் தனியுரிமைப் பாதுகாப்பு விதிகளும் உடனடியாக உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

YouTube Monetization : புதிய செக் வைக்கும் யூடியூப் - யூட்யூபர்ஸ் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு YouTube Partner Program தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, வி... மேலும் பார்க்க

பறக்கும் கார்: பத்தே நிமிடங்களில் 40 கி.மீ கடக்கலாம்; உத்தரகாண்ட் இளைஞரின் அசத்தல் முயற்சி!

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி தம்தா உருவாக்கிய ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ (HAPIDA SKYNeX) என்ற மின்சாரப் பறக்கும் கார் தற்போது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது... மேலும் பார்க்க

Victor Riparbelli: நோ சொன்ன 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்; இன்று ₹38,000 கோடி AI சாம்ராஜ்யம்!

செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், ChatGPT அறிமுகமாகி Generative AI உலகளவில் பெரும் கவனம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 'Text மட்டும் பயன்படுத... மேலும் பார்க்க

அமெரிக்க வேலையை விட்டுத் திரும்பிய தமிழர்... இந்திய MRI-யால் உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி?

பெங்களூரைச் சேர்ந்த 'Voxelgrids' என்ற மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹீலியம் இல்லாத 1.5 டெஸ்லா MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய தமிழ... மேலும் பார்க்க

`சொல்லாமலேயே வேலை செய்யும் AI'- 24/7 பிண்ணனியில் இயங்கும் Gemini Spark-ஐ அறிமுகப்படுத்திய Google

இதுவரை AI சாட்பாட்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கவனம் செலுத்தின. ஆனால் Gemini Spark Al அதைக் கடந்து, பயனரின் சார்பாகவே செயல்படும் 24 மணி நேர AI ஏஜென்ட் என்ற புதிய AI உதவியாளரை இந... மேலும் பார்க்க

எல்லாவற்றுக்குமான செயலியாக மாறும் X: `2036-ல் பணம் முக்கியத்துவத்தை இழக்கும்' - எலான் மஸ்க் கணிப்பு

சமூக ஊடக தளமான X-ஐ வெறும் தகவல் பரிமாற்ற தளமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் 'எல்லாவற்றிற்குமான செயலி' ஆக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்டகால இலக்காக ... மேலும் பார்க்க