செய்திகள் :

MI vs KKR: 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வென்று அசத்திய மும்பை அணி!

post image

13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

MI vs KKR
MI vs KKR

மும்பை அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த அணியாக களமிறங்கினாலும், டி20 உலகக்கோப்பையின் வின்னிங் கேப்டன் சூர்யா குமார் யாதவை இம்பாக்ட் பிளேயர் ஆக களமிறக்கினர்.

எதிர் புறத்தில் 25 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய கேமரோன் க்ரீன், கேப்டன் அஜிங்க்யா ரஹானே, கடந்த டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்த ஃபின் அலன்,வருண் சக்கரவர்த்தி,ரிங்கு சிங், சுனில் நரேன், போன்ற பலமான அணியாக களமிறங்கியது கொல்கத்தா அணி.

கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாகிய ரஹானே மற்றும் அலன் இணைந்து ஆட்டத்தின் தொடக்கத்திலயே ஆறு, நான்கு, என பறக்க விட்டு பவர் பிளேவை அதிரடியாக ஆடினர்.

KKR
KKR

ஐந்து ஓவர்களில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டின் தேடலில் இருந்த மும்பை அணியினருக்கு ஷர்துல் தாக்கூரின் மூலம் பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஃபின் அலன் 37(17) தனது விக்கெட்யை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 18 ரன்கள் எடுத்து ஒன்பதாவது ஓவரில் அதே ஷர்துல் தாக்கூரின் பந்தில் ஆட்டமிழந்தார், எதிர் முனையில் ரஹானே கியரை மாற்றாமல் அரை சதம் கடந்து அவுட் ஆக, ரகுவன்ஷி (51), ரிங்கு சிங்(33),

ரமன்தீப் (4) என , நான்கு விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து, 221 என்ற இமாலய இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி.

இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரிக்கெல்டேன், கொல்கத்தா பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 148 ரன்களைக் குவித்தனர்.

Rohit sharma
Rohit sharma

ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி (78)ரன்களுக்கு அவுட் ஆகினார்,

ரிக்கெல்டேன் (81),

சூர்யா குமார் யாதவ் (16),

திலக் வர்மா (20),

ஹர்திக் பாண்டியா (18),

நமன் தீர் (5)

ரன்கள் விளாசி, 221 என்ற கடினமான ஸ்கோரை 6 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி பிடித்து, 13 வருடமாக தனது முதல் போட்டியை வெற்றியே பெறாத அணியாக இருந்த மும்பை, இந்த வெற்றியின் மூலம் அந்த ஸ்ட்ரீக்யை முறியடித்துள்ளது.

IPL: முதல்முறையாக சாம்பியனாக களம் காணும் RCB; பேட்டிங் ஓகே, பந்துவீச்சு? - அதிர்ச்சி கொடுக்குமா SRH?

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில், ... மேலும் பார்க்க

"அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார்.!"- சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் 2026 திருவிழா இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. பெங்களூரு சின்ன... மேலும் பார்க்க

IPL 2026: "யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" - சுப்மன் கில்

'யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.27) கோலாகலமாகத் தொடங்க இருக்க... மேலும் பார்க்க

IPL : 100+ விக்கெட்டுகள், ஆனால் ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லாத ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா ?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவம் 'பர்பிள் கேப்'. இந்தத் தொப்பியை அணிவது ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவு. ஆனால், ஐபிஎல் வரலாற்ற... மேலும் பார்க்க

`டிரெஸிங் ரூமில் நிறவெறி; அழவைத்த சக வீரர்கள்' - கசப்பான அனுபவம் பகிர்ந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கி... மேலும் பார்க்க

Dhoni: "எனக்கு இளம் வயது தோனியைத் தான் பிடிக்கும்; ஏன்னா.!"- சவுரவ் கங்குலி புகழாரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.'Sports Now' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, " தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (20... மேலும் பார்க்க