செய்திகள் :

MI vs PBKS: "இப்போ என்ன சொல்றதுனே தெரியவில்லை..." - தொடர்ச்சியான தோல்விகள் குறித்து ஹர்திக் வேதனை

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் தொடர்ந்து நான்கு தோல்விகளின் மூலம் ஒன்பதாவது இடத்திலேயே தொடர்கிறது மும்பை அணி.

இந்தத் தொடர்ச்சியான தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹார்டிக் பாண்டியா, ``உண்மையாகச் சொன்னால், இப்போதைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் மீண்டும் ஆரம்ப நிலைக்குத் திரும்பி, எங்கே தவறுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். அது தனிப்பட்ட நபர்களாலா? அணியாகவா? திட்டமிடலிலா? இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு, அடுத்ததாக என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டும். எதிரணிக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

பந்து ரிவர்ஸ் ஆகத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் பனித்துளி வந்ததால் சற்று எளிதானது. ஆனாலும், அதை விட முக்கியமாக அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர். அவர்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்தவர்கள். ஃபீல்டிங்கிலும் நிச்சயமாகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

இது நமக்கு மீண்டும் சிந்திக்க வைக்கும் விஷயம். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டுமா? அல்லது இதேபோலத் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருந்து நிலையை மாற்ற முடியுமா? இவை எல்லாம் கடினமான கேள்விகள். ஆனால் இறுதியில், அதற்கான பதிலை நாங்களே கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான பொறுப்பையும் நாங்களே ஏற்க வேண்டும்” என்றார்.

MI VS PBKS: பறந்து கேட்ச் பிடித்த ஷ்ரேயஸ்; வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்; ஷாக் ஆன MI! | வீடியோ

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.குறிப்... மேலும் பார்க்க

MI vs PBKS: "அந்தத் திறமை எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது" - வெற்றிக்கான ரகசியத்தைச் சொன்ன ஸ்ரேயஸ்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 16) ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்ட... மேலும் பார்க்க

RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" - ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற பெங்களூரு vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன் சைடு போட்டியாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ 147 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை 15.1 ஓவர்களிலே எட்ட... மேலும் பார்க்க

RCB VS LSG: "நாங்க பேட்டிங்ல சொதப்பிட்டோம், ஆனா நாங்க மீண்டு வருவோம்" - நிக்கோலஸ் பூரன்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கைய... மேலும் பார்க்க

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரி... மேலும் பார்க்க

`உலகக்கோப்பை நாயகன் சூர்யா...' பேட்டிங்கில் தடுமாற்றம்; ஒலிம்பிக் அணியில் இடத்துக்குப் போராட்டம்?

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்து, ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்திருக்கலாம்.ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவரது சமீபத்திய ஆட்டங்கள் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.குறிப்பாக,... மேலும் பார்க்க