செய்திகள் :

Mohanlal: சபரிமலையில் மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நடந்த அனுமதி மறுப்பு - பின்னணி என்ன?

post image

மோகன்லால் மற்றும் இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் 'தொடரும்' திரைப்படம் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி மீண்டும் இணைந்தது.

அந்தப் படத்திற்கு 'அதிமனோஹரம்' எனத் தலைப்பிட்டிருந்தார்கள். இப்படத்தின் சில காட்சிகளைச் சபரிமலையில் எடுக்கப் படக்குழு திட்டமிட்டிருந்தது.

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால்

ஆனால், அந்தப் படப்பிடிப்பிற்குத் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 'புலிகள் காப்பக' எல்லைக்குள் வருவதால், அங்குப் படப்பிடிப்பு நடத்த வனத்துறையின் அனுமதி தேவையாம். ஆனால், வனத்துறை படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

முன்னதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சில நிபந்தனைகளுடன் சபரிமலையில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருந்தது.

அதற்காக படத்தின் முழு கதையையும் சமர்ப்பிக்க வேண்டும், பக்தர்கள் மற்றும் கோயில் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் எந்தக் காட்சியும் இருக்கக் கூடாது, ரூ.50,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் மோகன்லால்
சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் மோகன்லால்

ஆனால், கடும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் படப்பிடிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இப்போது சன்னிதானத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டாலும், 'பம்பை' வரை படப்பிடிப்பு நடத்தப் படக்குழுவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் மோகன்லாலுடன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

"மனசோர்வுடன் இருக்கும்போதெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும்!" - நெகிழும் அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் ஊடகவியலாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், காதலித... மேலும் பார்க்க

"நான், மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவிருந்த படம் கைவிட வேண்டிய சூழல்.!" - பிருத்விராஜ் ஓப்பன் டாக்

பிருத்விராஜ் நடித்துள்ள 'கலீஃபா' திரைப்படம் ஓணம் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணியில் பிருத்விராஜ் ஈடுபட்டு வருகிறார். Khalifa Posterநேற்றைய தினம் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்வில் பிரு... மேலும் பார்க்க

"நீங்க மம்மூட்டி சாரா? என்னை ஃபாலோ செய்ங்க!" - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழக ரசிகர்!

தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழகத்தைச் சேர்ந்த பாண... மேலும் பார்க்க

"இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் மு... மேலும் பார்க்க

Mohanlal: "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?" - மகளின் சினிமா அறிமுகம் பற்றி மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

Keralam: ஸ்வேதா மேனன் வழங்கும் 'ஓண கிட்' வாங்க மறுக்கும் நடிகைகள்; 'அம்மா' அமைப்பில் தொடரும் விவாதம்

படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மலையாள த... மேலும் பார்க்க