செய்திகள் :

Nagarjuna: ''மணிரத்னம் படத்தில் நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு" - சொல்கிறார் நாகர்ஜூனா

post image

நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தது தனது திரையுலகப் பயணத்திலேயே மிகவும் துணிச்சலான முடிவு என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனது மகன்களான நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் வழக்கமான கதைகளைத் தேர்ந்தெடுக்காமல், இதுபோன்ற துணிச்சலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் பகிர்ந்திருக்கிறார்.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

சமீபத்தில் நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய மூவரும் இணைந்து 'வெரைட்டி' இதழுக்குப் பேட்டியளித்திருந்தனர். இதில் நாகார்ஜுனா பேசுகையில், "மணிரத்னம் சாருடன் 'கீதாஞ்சலி' படத்தில் நடித்தது அந்த நேரத்தில் நான் எடுத்த மிகப்பெரிய துணிச்சலான முடிவு.

எனக்கு முன்பு முன்னணி நடிகர்கள் பலர் அந்தப் படத்தில் நடிக்கத் தயங்கிய நிலையில், நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

என் திரை வாழ்க்கையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக்கொள்ள 'கீதாஞ்சலி' படம் எனக்கு மிகவும் உதவியது.

என் மகன்கள் நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் ஒரே மாதிரியான வழக்கமான கதைகளில் நடிக்காமல், இதுபோன்று துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் நடிகர்கள் அப்படித் துணிச்சலான முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

Nagarjuna with his sons
Nagarjuna with his sons

1990-களில் சில படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்களுக்கு மீண்டு வர வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இப்போது திரையுலகம் அதிவேகமாக இயங்குகிறது. ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட விருப்பங்கள் இருக்கின்றன. இதனால் பெரிய ரிஸ்க் எடுப்பது சவாலாக மாறியிருக்கிறது. இருந்தாலும், துணிச்சலான முடிவுகள்தான் ஒரு நடிகனுக்குச் சரியான அடையாளத்தைத் தரும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் 1989-ல் வெளியான ‘கீதாஞ்சலி’ திரைப்படம் இந்த மாதம் ஆகஸ்ட் 28 அன்று ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"என் தம்பி எனக்கு போன் செய்வதே இல்லை.!"- பிரம்மானந்தம் குறித்து உருக்கமாகப் பேசிய சகோதரர்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீ வதன் தனக்கும், தனது சகோதரருக்கும் (பிரம்மானந்தம்) இடையேயான உறவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்... மேலும் பார்க்க

"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவரகொண்டா

'தொரசானி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆனந்த் தேவகொண்டா. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் இவர். Anand Devarakondaஅவர் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி... மேலும் பார்க்க

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில்... மேலும் பார்க்க

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரைய... மேலும் பார்க்க

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க