செய்திகள் :

National Herald Case: ரூ.2000 கோடி சொத்து அபகரிப்பு? சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு; பின்னணி என்ன?

post image

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதன் சொத்துக்களைச் சட்டவிரோதமாக வாங்கியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கடந்த 2012ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அம்மனுவை விாசரித்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. எனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது கடந்த ஏப்ரம் மாதம் பணமோசடி சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.

அமலாக்கப்பிரிவு
அமலாக்கப்பிரிவு

இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பைக் காலவரையின்றி ஒத்தி வைத்திருக்கிறது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டதற்கிணங்க டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இவ்விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் நான்கு பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தவிர அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்), யங் இந்தியன் மற்றும் டோடெக்ஸ் மெர்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் தாய் நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்தை மோசடியாக வாங்குவதற்கு மேற்கண்ட 6 பேரும் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமோசடி சட்டத்தின் 66(2)வது பிரிவின் கீழ் எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் அமலாக்கப்பிரிவு யார் மீதும் வழக்குப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ள முடியும். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேருவும், சுதந்திர போராட்ட தியாகிகளும் சேர்ந்து 1938ம் ஆண்டு தொடங்கினர். அப்பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நிதி நெருக்கடியால் வெளிவருவது நின்றுவிட்டது.

அந்நேரம் அக்கம்பெனிக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அப்பணம் திரும்பக் கொடுக்கப்படாத காரணத்தால் அந்த நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிட்டது.

நேஷனல் ஹெரால்டு
நேஷனல் ஹெரால்டு

இப்போது இதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்குத் தலா 38 சதவீத பங்குகள் இருக்கின்றன. யங் இந்தியன் என்ற கம்பெனிக்குதான் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கு இருக்கிறது. யங் இந்தியன் கம்பெனியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குனர்களாக இருக்கின்றனர்.

இருவரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.2000 கோடி சொத்தை மோசடியாக அபகரித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க