செய்திகள் :

Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம்

post image

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.

நேபாளத்தில் உள்ள சோசென் கோலா, புரேபு சாங்போ ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில், இந்த வெள்ளத்தால் உருவாகியுள்ள ஒரு பெரிய இயற்கை தடுப்பு ஏரி, அடுத்த 72 மணி நேரத்திற்குள் உடையக்கூடும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் நீர் வள அமைச்சகம் வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியை 'சீனா சென்ட்ரல் டெலிவிஷன்' ஒளிபரப்பியுள்ளது.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

அந்தச் செய்தியின்படி, `ஏரியில் ஏற்கனவே 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கி, அது தற்போதே நிரம்பி வழியத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று நாள்களில் கூடுதலாக 30 லட்சம் கன மீட்டர் நீர் அந்த ஏரிக்குள் வரக்கூடும் என்பதால், இந்த இயற்கை தடுப்பணை உடைந்து பேராபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சீன நீர் வள அமைச்சகம் அந்த இடத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ள பாதிப்பு குறித்த உருவகப்படுத்துதல்கள் மற்றும் மதிப்பீடுகளைச் செய்து வரும் அதிகாரிகள், ஏரி உடைந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், அவசர மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்' எனக் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னதாக, சீனா-நேபாள எல்லையில் நேபாளப் பகுதியில் இருந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, தென்மேற்கு சீனாவின் சீசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள Gyirong பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது அப்பகுதியில் சீன அதிகாரிகள் பெரிய அளவிலான நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இந்தப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

Gyirong பகுதியில் மீட்புப் பணிகளுக்காக சீன ராணுவம், பொறியியல் பிரிவுகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிவாரண நிறுவனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மோசமான நிலப்பரப்பு, தொடர் மழை மற்றும் அடுத்தடுத்து ஏற்படும் பேரிடர்களுக்கு நடுவே, மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 260 வெளிநாட்டவர்கள் உட்பட 558 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal: ”கடைசியாக எடுத்த போட்டோவை அனுப்பினார்” - அம்மாவைப் பற்றி தகவல் கிடைக்காததால் மகன் வேதனை

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் கடந்த 23ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட... மேலும் பார்க்க

கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதல்; இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழப்பு - குளித்தலை சோகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (48). இவர், கரூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வென்டிலேட்டர் வெடித்து மருத்துவமனையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் வெண்டிலேட்டர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்துக்கொண்டது. மருத்துவ... மேலும் பார்க்க

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ... மேலும் பார்க்க

தஞ்சை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர்; காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் பலியான சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில்... மேலும் பார்க்க

அறுவடை இயந்திரத்தில் சிக்கிய புடவை; பெண் தொழிலாளி உயிரிழப்பு - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் ச... மேலும் பார்க்க