செய்திகள் :

Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்..." - நடிகர் அங்குர் ரத்தன்

post image

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளத்தினால் மக்கள் தங்கள் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு

இந்நிலையில் இந்தப் பேரழிவு நடப்பதற்கு வெறும் 16 மணி நேரத்திற்கு முன்பாகத்தான், நடிகர் அங்குர் ரத்தனும் அவரது குடும்பத்தினரும் வெள்ளம் அடித்துச் சென்ற பகுதியில் நின்று புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து 10-15 நிமிட பயணத் தொலைவில் இருந்த ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியிருக்கின்றனர். வெள்ளம் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு,பாதுகாப்பான நகரத்திற்குச் சென்றதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் அங்குர் ரத்தன், "கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்தோம். நாங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு வெள்ளம் வந்த அந்த இடத்தில்தான் இருந்தோம் என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

அங்குர் ரத்தன்
அங்குர் ரத்தன்

நானும், என் மனைவியும் அங்கு நின்றுதான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து 10-15 நிமிட தொலைவில்தான் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருந்தது.

எங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் உயிர்தப்பிவிட்டோம். உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்!நேபாளத்... மேலும் பார்க்க

Nepal: ”இதுவரை பஸ் கிடைக்காததே நல்ல விஷயம்தான்” - டி.என்.ஏ சோதனைக்கு வந்த மகன் நம்பிக்கை

நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்... உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு செய்த ட்ரோன் வீடியோ!

நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிர... மேலும் பார்க்க

"உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி"- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர்

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க