செய்திகள் :

OM: ``'ஓம்' என்று தலைப்பு வைக்கக் காரணம் இதுதான்"- ராஜ்குமார் பெரியசாமி

post image

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. செம்மர கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இதில் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இன்று திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்திருந்தார்.

அப்போது, ``இது ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இதில் பல முக்கியமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

தனுஷ்
தனுஷ்

நான் சொல்ல நினைத்த ஒரு முக்கியமான கருத்தை, இத்தகைய சிறந்த நடிகர்கள் நடித்து, அவர்கள் வாயிலாகப் பேசியிருப்பது எனக்குப் பெரிய திருப்தியை அளிக்கிறது. திரையரங்குகள் ஒதுக்கீடு என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த வாரத்திற்கான வெளியீட்டை எப்படித் திட்டமிட வேண்டுமோ, அதை அவர்கள் சரியாகத் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

இந்தப் படம் நிஜமாக நடந்த ஒன்றிரண்டு சம்பவங்களை உந்துதலாக எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றி ஒரு புனைவாகத்தான் இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
'அமரன்' திரைப்படத்தைப் போலவே, இன்று வெளியாகும் இப்படத்திற்கும் மிகப்பெரிய அளவிலான வரவேற்பும் வெற்றியும் ரசிகர்கள் கையில்தான் உள்ளது. ஒரு இயக்குநராக எனது ஒரு படத்திற்கும், இன்னொரு படத்திற்கும் இடையே நான் எந்த அளவுகோலையும் வைத்துக்கொள்வதில்லை. இது என்னுடைய மூன்றாவது திரைப்படம். கண்டிப்பாக இது ஒரு முக்கியமான பதிவாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. தனுஷ் சாருக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

ராஜ்குமார் பெரியசாமி - தனுஷ்

பொழுதுபோக்கை விரும்பி வருபவர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் நிறைந்துள்ளன. அதே சமயம், அந்தப் பொழுதுபோக்கிற்குப் பின்னால் ஒரு முக்கியமான சமூகப் பதிவும் உள்ளது. ரசிகர்கள் கண்டிப்பாக மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வரலாம். தனுஷ் சார் ரசிகர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொள்ளக்கூடியவர். ஏதோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயம் சர்ச்சையாகியிருக்கலாம்.

அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு வணிக ரீதியான வெற்றிப் படமாகவும், அதே நேரத்தில் அனைவரையும் சிந்திக்க வைக்கும் படமாகவும் இது அமையும் என்று நம்புகிறேன். நடிகர் தனுஷ்க்கு 'இந்தியன் ஆஃப் தி இயர்' விருது வழங்கப்பட்டுள்ளது. பெருமைப்பட வேண்டிய ஒரு விருது அது. அந்த விருதின் பெயரிலேயே ஒரு பெரிய கௌரவமும் பெருமையும் அடங்கியுள்ளது. படத்திற்கு 'ஓம்' என்று தலைப்பு வைக்கக் காரணமும் படத்தில், 'ஆபரேஷன் மோல்' (Operation Mole) என்ற ஒன்று உள்ளது, அதுதான் இதற்குக் காரணம். இதுதவிர வேறு சில காரணங்களும் உள்ளன" என்றார்

Keerthy Suresh: ``ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேச மாட்டேன்" - நடிகை கீர்த்தி சுரேஷ்

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தொடர் 'அக்கா'. கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் நடித்திருக்கும் இந்த சீரிஸ... மேலும் பார்க்க

Keerthy Suresh: ``அப்பா - பொண்ணு உறவுனு சொன்னது கேட்கலையா?"- விமர்சனங்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந... மேலும் பார்க்க

'வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தை..!'- செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் விளக்கம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். நவம்பர் 20 ஆம் தே... மேலும் பார்க்க

"என் மூத்த மகள் விரும்பினால் அவரது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார்" - நடிகர் அர்ஜுன் விளக்கம்

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி கலந்துகொள்ளாதது பேசுபொருளான நிலையில் தற்போது அதுகுறித்த... மேலும் பார்க்க

"இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா என யோசிக்கிறேன்" - மிஷ்கின் சொல்லும் காரணம் என்ன?

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

"'டோரதி' படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன; அவைதாம் அந்தப் படத்தின் வெற்றி"- கீர்த்தி சுரேஷ்

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க