செய்திகள் :

"OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை" - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.

அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம்.

அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

பின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார்.

இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார்.

ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.

இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார்.

அதன் பின், அவர் பேசியதாவது...

"அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர்.

அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன்.

தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்
வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது.

ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும்.

என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக" என்று பேசியுள்ளார்.

மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ?

`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!' – பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற... மேலும் பார்க்க

NDA கூட்டணி: "நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்" - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்ப... மேலும் பார்க்க

`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி... மேலும் பார்க்க

"அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.... மேலும் பார்க்க

``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!" - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பி... மேலும் பார்க்க

'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்கள... மேலும் பார்க்க