இளையராஜா மனைவியும் என் மனைவியும் Close Friends - Sathya Jyothi Thyagarajan | Raj...
Paytm Payments வங்கியின் லைசன்ஸை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது ஏன்? 'அந்த' 4 காரணங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி Paytm பேமென்ட் வங்கியின் வங்கி லைசன்ஸை இன்று ரத்து செய்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் டிஜிட்டல் மோடில் வங்கியாக இயங்கி வந்தது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேடிஎம் பேமென்ட் வங்கி பெற்ற லைசன்ஸின்படி, இந்த வங்கியால் சிறு சிறு டெபாசிட்டுகளைப் பெற முடியும். ஆனால், கடன் எல்லாம் வழங்க முடியாது.
ஆனால், வழக்கமான வங்கிகளைப்போல, ஏ.டி.எம் மற்றும் (டிஜிட்டல்) டெபிட் கார்டு வசதிகள் இந்த வங்கிக்கும் இருந்தது.
ஆனால், தற்போது பேடிஎம் பேமென்ட் வங்கியின் லைசன்ஸ் ரத்து ஆகியுள்ளது.

இதற்கு நான்கு காரணங்களை இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது...
1. பேடிஎம் பேமென்ட் வங்கி 'வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்' பிரிவு 22 (3) (b)-ன் கீழுள்ள நிபந்தனைகளுக்கு எதிராக... அந்த வங்கியில் நடந்த செயல்பாடுகள் வங்கி மற்றும் அதன் டெபாசிட்டர்கள் நலன்களுக்குப் பாதகமாக இருந்துள்ளன.
2. வங்கியின் மேலாண்மை டெபாசிட்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்கு விரோதமாக உள்ளது. எனவே, பேடிஎம் பேமென்ட் வங்கி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 22 (3) (c)-ன் கீழ் உள்ள விதிமுறைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
3. வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 22 (3) (e)-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி, இந்த வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதன் மூலம் எந்தவொரு பயனோ, பொது நலனோ இருக்கப் போவதில்லை.
4. அந்த வங்கிக்கு வழங்கப்பட்ட 'பேமென்ட்ஸ் பேங்க்' உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. இதன் மூலம் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 22 (3)(g)-ன் கீழ் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
லைசன்ஸ் ரத்தானாலும், அந்த வங்கியில் ஏற்கெனவே டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைகளை எடுப்பதில் சிக்கல் இல்லை.




















