"Vijay-கிட்ட நான் வியந்த விஷயம், அரசியல் Entry-ஆ?" | Arcot Nawab Interview
Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?
வணக்கம்.
புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், "இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மாட்டேன், எடையைக் குறைப்பேன்" இத்யாதி இத்யாதி... சில சபதங்களை மோட்டிவேஷன் பொங்க எழுதுவோம்.
பிப்ரவரி 15-ல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். டைரி மூலைக்குப் போய்விடும். பழைய வாழ்க்கை தொடரும்.
ஏன் இப்படி?
நமக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அதை அடைவதற்கான சரியான 'அஸ்திவாரம்' (Foundation) இல்லை.
பிரச்னை: தெளிவற்ற பயணம்
உங்கள் நிதி வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். உங்களைப் போல ஒரு டிப் டாப் ஆசாமி, ரயில் நிலையத்திற்குப் போய், டிக்கெட் கவுண்டரில் நின்று "எங்கேயாவது ஒரு டிக்கெட் கொடுங்கள்" என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பலரின் நிதி நிலைமை.
பணம் வருகிறது. செலவாகிறது. இயற்கைதான் இல்லையா?
"சேமிக்க வேண்டும்" என்று நினைக்கிறோம். ஆனால் மாதக் கடைசியில் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை.
"பிள்ளையின் படிப்புக்கு, என் ஓய்வுக்காலத்துக்கு" என்று பெரிய கனவுகள் உண்டு. ஆனால் அதற்கான திட்டம்? "கடவுள் விடுற வழி" என்று விட்டுவிடுகிறோம்.
பணவீக்கம் உங்கள் சேமிப்பைத் திருடிக்கொண்டிருக்கிறது என்பது கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் அம்மா போல வெள்ளந்தியாக இருக்க கூடாது.
இப்படித் திட்டமில்லாமல் போனால், 2026-ம் இன்னொரு சாதாரண வருடமாகவே கடந்து போய்விடும். பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம். (ஆனால் கொஞ்சம் பயப்படுங்கள். தவறில்லை.)

தீர்வு: ஒரு தெளிவான வரைபடம்
இந்தக் குழப்பத்தை உடைக்க, உங்களுக்குத் தேவை ஒரு தெளிவான வரைபடம் (Financial Roadmap). அதை உருவாக்கவே இந்தச் சிறப்பு அமர்வு.
தலைப்பு: 2026 – உங்கள் கனவுகளுக்கு அடித்தளமிடுவது எப்படி?
நாள்: டிசம்பர் 28, 2025 (ஞாயிறு)
நேரம்: காலை 11:00 – 12:30 IST

இந்த 90 நிமிடங்களில் நாம் மேலோட்டமாகப் பேசப் போவதில்லை. ஆழமாக, ஆனால் எளிமையாக அணுகப்போகிறோம்.
நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
இலக்கு நிர்ணயம்: ஆசைக்கும் இலக்குக்கும் வித்தியாசம் உண்டு. "நிறைய பணம் வேண்டும்" என்பது ஆசை. "2030-ல் 10 லட்சம் வேண்டும்" என்பது இலக்கு. 2026-க்கான உண்மையான இலக்குகளை எப்படி செட் செய்வது என்று பார்க்கப்போகிறோம்.
SIP எனும் மந்திரம்: மாதம் 10,000 ரூபாய் சேமிப்பது எப்படி 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும்? கூட்டு வட்டியின் (Compounding) சக்தியை உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது?
தவறுகள்: புத்தாண்டு உற்சாகத்தில் அவசரப்பட்டு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது, தேவையில்லாத பங்குகளை வாங்குவது போன்ற பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது?
சமநிலை: இன்றைய ஆசைகளையும், நாளைய தேவைகளையும் (Savings vs Spending) எப்படிச் சமாளிப்பது?
வழிகாட்டி யார்?
திரு. A.R. குமார். (Chief of Content, Labham & Former Joint Editor, Nanayam Vikatan). நாணயம் விகடனில் பல ஆயிரம் கேள்விகளுக்குப் பதிலளித்து, சிக்கலான நிதி விஷயங்களை பாமரருக்கும் புரியும் வகையில் எழுதியவர்.

முடிவு: ஒரு புதிய ஆரம்பம்
இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகு என்ன நடக்கும்?
தெளிவு: "அடுத்து என்ன செய்ய வேண்டும்" என்ற குழப்பம் இருக்காது.
அமைதி: உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை பிறக்கும்.
செயல்: சும்மா யோசித்துக்கொண்டிருக்காமல், முதல் அடியை எடுத்து வைப்பீர்கள்.
செபி (SEBI) போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சரியான அறிவுடன் அணுகினால், இது உங்கள் செல்வத்தை உருவாக்கும் சிறந்த கருவி.
வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு. 2026-ஐ உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வருடமாக மாற்றும் முடிவு உங்கள் கையில்.
இடங்கள் குறைவு. இன்றே பதிவு செய்யுங்கள்.
பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் -https://labham.money/webinar-dec-28-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec28_2025
சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள்.
- டீம் லாபம்




















