செய்திகள் :

Pizza 4: '''பீட்சா' பிரான்சைஸுக்கு எப்பவும் மார்கெட் இருக்கு!" - 'பீட்சா' தயாரிப்பாளர் சி.வி.குமார்

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'பீட்சா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சினிமாவுக்கான கதவையும் கார்த்திக் சுப்புராஜுக்குத் திறந்து வைத்தது.

அப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, 'பீட்சா' தயாரிப்பாளர் சி.வி. குமார், 'பீட்சா 2', 'பீட்சா 3' என அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை வெவ்வேறு இயக்குநர்களை வைத்து எடுத்தார்.

பீட்சா முதல் பாகம்
பீட்சா முதல் பாகம்

2023-ம் ஆண்டு 'பீட்சா 3' வெளியாகியிருந்தது. தற்போது, அதன் நான்காம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி. குமார்.

இந்த நான்காம் பாகத்திற்குத் தயாரிப்பாளர் சி.வி. குமார்தான் கதாசிரியராகவும் பணிகளை கவனித்து வருகிறார். 'பீட்சா 4' குறித்தும், 'பீட்சா' பிரான்ச்சைஸுக்கு இருக்கும் மார்க்கெட் குறித்தும் சி.வி. குமாரிடம் பேசினோம்.

நம்மிடையே பேசியவர், "இப்போது மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் 'பீட்சா 4' படத்திற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். 'பீட்சா 3' திரைப்படம் வெளியான ஒரு ஆறு மாதத்திலேயே 'பீட்சா 4' திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்க ஆரம்பித்துவிட்டோம்.

ஆனால், அதற்கான ஸ்கிரிப்ட் அப்போது சரியாக அமையவில்லை. பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு புதிய ஐடியா கிடைத்தது. அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் திரைக்கதையாக மாற்றினேன். அது முழுமையானதாகத் தெரிந்ததும், படமாகச் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.

நான்தான் 'பீட்சா' படத்தின் கதாசிரியர். என்னுடைய கதைகள் வழக்கமான சயின்ஸ் பிக்ஷன் ஜானர் படமாகத்தான் இருக்கும். ஆனால், ஹாரர் கதைகள் என்பது எனக்குப் புதியது. அதனால், இதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு எழுதினேன். அதே நேரத்தில், இந்தப் படம் காமன் ஆடியன்ஸுக்கான ஒரு ஹாரர் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

Producer CV Kumar
Producer CV Kumar

அதே போல், பழிவாங்கும் பேய், பிளாஷ்பேக், அந்தப் பேய் வீட்டுக்குள்ளே போய் உட்கார்ந்துகொள்வது போன்ற வழக்கமான பேய் படங்களுக்கான ஃபார்முலாக்கள் எதுவும் இதில் இருக்காது. ஒரு முற்றிலும் புதிய முயற்சியாக இருக்க வேண்டும் என்று யோசித்து எழுதினேன்.

நான் திட்டமிட்டபடி திரைக்கதையும் நிறைவாக உருவாகியிருக்கிறது. 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' திரைப்படத்தில் என்னுடைய அசோசியேட்டாகப் பணியாற்றிய பிரசாந்த்சந்தர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்." என்றவர், 'பீட்சா' பிரான்ச்சைஸுக்கு இருக்கும் மார்க்கெட் குறித்து, " 'பீட்சா' படங்களுக்கான மார்க்கெட் எப்போதுமே பெரியதாக இருக்கிறது.

அதனால்தான் இப்போது இந்த நான்காம் பாகத்தை எடுக்க முடிகிறது. மார்க்கெட் இல்லை என்றால் நம்மால் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடியாது. 'பீட்சா' என்பது ஒரு மிகப்பெரிய பிரான்ச்சைஸ் மதிப்பு கொண்ட ஒரு பிராண்ட்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இது நான்கு முதல் ஐந்து மொழிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு பிரான்ச்சைஸ். நாம் முதன்மையாகத் தமிழில் எடுப்பதால் தமிழை மட்டுமே பார்க்கிறோம். ஆனால், இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஒடியா மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளிலுமே பெரிய ஹிட்டான ஒரு பிரான்ச்சைஸ்.

சொல்லப்போனால், 'பீட்சா 3' திரைப்படம் தமிழை விட ஹிந்தியிலும், ஒடியாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒவ்வொரு பாகமும் எங்களுக்குப் பெரிய லாபத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் இந்த பிரான்ச்சைஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்கிறோம்.

Pizza 4 Movie
Pizza 4 Movie

'பீட்சா' இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களுக்கு இடையே நீண்ட இடைவெளி இருந்தது. இனிமேல் அந்தத் தவறு நடக்கக் கூடாது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அடுத்தடுத்த பாகங்களைப் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

2023-ல் மூன்றாவது பாகம் வந்தது, எனவே 2026-க்குள் இந்த நான்காவது பாகத்தை முழுமையாகப் பண்ணி முடித்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறோம். இந்த வருடமே படம் ரிலீஸுக்கும் வந்துவிடும் என்று நம்புகிறேன்.

'பீட்சா 3' நல்ல பிசினஸ் செய்ததால்தான் இப்போது நாம் 'பீட்சா 4' செய்கிறோம். ஒருவேளை எப்போது நமக்கு அது சரியாகப் போகவில்லை என்று தோன்றுகிறதோ, அப்படியொரு சூழல் வரும்போது நாம் அடுத்த பாகம் குறித்த முடிவை எடுக்கலாம். எனவே, 'பீட்சா 4'-ன் பிசினஸ் மற்றும் வெற்றியைப் பொறுத்தே 'பீட்சா 5' முடிவுகள் எடுக்கப்படும்." எனப் பகிர்ந்துகொண்டார்.

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க