"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
Portrait of Elisabeth Lederer: கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஒற்றை ஓவியம் - என்ன ஸ்பெஷல்?
கலை உலகம் இதுவரை எத்தனை எத்தனையோ உலக சாதனைகள் படைத்திருக்கிறது. அந்த வரிசையில் வரலாற்றில் முதன் முதலில் சுமார் 1,972 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 'Portrait of Elisabeth Lederer' என்ற ஓவியத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காண்போம்.
ஆஸ்திரேலியாவை சார்ந்த குஸ்டாவ் கிளிம்ட் (Gustav Klimt) என்ற ஓவியரின் கைவண்ணமே இந்த படைப்பாகும்.
யார் இந்த குஸ்டாவ் கிளிம்ட்?
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 1862ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கிளிம்ட் பிறந்தார். இவர் அப்பா ஒரு நகை வியாபாரி. கிளிம்ட்டுடன் பிறந்தவர்கள் 6 பேர். இவர்தான் மூத்தவர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களாக விளங்கினர். அதில் கிளிம்ட் தேர்ந்தெடுத்த துறையே இந்த ஓவியத்துறை.

ஆரம்ப காலகட்டத்தில் இவரது ஓவியங்கள் முழுவதும் இயற்கை சூழல்களை சார்ந்ததாகவே இருந்தது.
மரங்கள், வீடு, வயல்வெளிகள் போன்ற இவரின் ஓவியங்கள் அளவுக்கதிகமான புகழையும், விமர்சனங்களையும் இவருக்கு எடுத்து தந்தது. ஆனால், அதற்கு பின் தன் ஒட்டுமொத்த ஓவிய பாணியையும் முழுவதுமாய் மாற்றி தனக்கென தனி இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.
இதன் விளைவாக இவரின் ஓவியங்கள் பெரிதும் பேசும்பொருளாய் மாறியது. அது ஆபாசம் சார்ந்ததாகவும், பெண் அழகியல் சார்ந்ததாகவும் அதிகம் இருந்தது. ஆரம்பகால கட்டத்தில் கிளிம்ட் வரைந்த இயற்கை ஓவியபாணி ஓவியங்களை வரவேற்ற கலை விமர்சகர்கள், புதிய பாணியாக கையாளப்பட்ட இந்த ஆபாச ஓவியங்களை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அத்தகைய ஒவியங்களால்தான் கிளிம்ட் உலகின் உன்னத ஓவியர்களில் ஒருவராக இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பதுவே மறுக்க முடியாத உண்மையாகும்.

லிசபெத் லெடரர் ( 'Portrait of Elisabeth Lederer')
இந்த ஓவியம், 1914-1916 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், வியன்னா பொற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஓவியத்தில் லிசபெத் லெடரர் என்ற பெண், வெள்ளை அங்கி அணிந்து கொண்டு நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டுகிறது. மேலும் இது இதுவரை மிக அதிக விலைக்கு ஏலம் போன நவீன ஓவியம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் $236.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2000 கோடி) விற்கப்பட்டது.
இதுவரை மிக அதிக விலைக்கு ஏலம் போன நவீன ஓவியம் என்ற சாதனை படைத்துள்ளது.
யார் இந்த எலிசபெத் லெடரர்?
குஸ்டாவ் கிளிம்ட் நண்பராக அவரோடு சேர்ந்து பணியாற்றிய தன் வாடிக்கையாளர்களில் ஒருவரது மகள்தான் இந்த ஓவியத்தில் இருப்பவர் என்று கூறப்படுகிறது.
20 நிமிடங்களிலேயே முடிந்த ஏலம்!
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 6 பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு, ஓவியத்தை வாங்க போட்டியிட்டனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெறும் 20 நிமிடங்களுக்குள் ஏலம் முடிந்தது. ஓவியத்தை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அமெரிக்க வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட 2வது ஓவியம் என்ற பெருமை குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியம் பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த ஓவியம் பின்னர் 1948ம் ஆண்டு மீண்டும் மீட்கப்பட்டது.



















