செய்திகள் :

Pradeep Rawat: ரத்தப் புற்றுநோயால் 'கஜினி' பட வில்லன் காலமானார்

post image

'லகான்', 'கஜினி', 'வீரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74.

Pradeep Rawat
Pradeep Rawat

கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரதீப் ராவத்திற்கு, நோய்யின் தாக்கம் குறைந்து குணமடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புற்றுநோய் தீவிரமடைந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்திருக்கிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் பிரதீப் ராவத்.

தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமானவர்.

Pradeep Rawat
Pradeep Rawat

பிறகு 'வாத்தியார்', 'வீரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் பிரதீப் ராவத். திரையுலகினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movieஇப்படத்தின் தயாரிப்பாளர் நம... மேலும் பார்க்க

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது ... மேலும் பார்க்க

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த... மேலும் பார்க்க

Ramayana: "அந்தச் சம்பவத்துக்காக மட்டுமே சூர்ப்பணகை நினைவுகூரப்படுகிறார்; ஆனா..."- ரகுல் ப்ரீத் சிங்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப... மேலும் பார்க்க

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ... மேலும் பார்க்க

Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது. திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழு... மேலும் பார்க்க