பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கி...
Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ' டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to
ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கும் நாளன்றே, நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அப்போது இனி நீங்கள் கட்டாயம் ரயில்வே டிக்கெட் புக்கிங் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
தற்போது ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் 60 நாள்களுக்கு முன்பு திறக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, வரும் மார்ச் 3-ம் தேதிக்கான ரயில்வே டிக்கெட் இன்று ஓபனாகி இருக்கிறது. அந்தத் தேதிக்கான டிக்கெட்டை இன்றே நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், டிக்கெட் புக் செய்யும் ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

கடந்த 29-ம் தேதி முதல், காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஆதார் எண் இணைத்திருப்பவர்களால் மட்டுமே அன்றைய ஓபனிங் டிக்கெட்டை புக் செய்ய முடியும்.
12 மணிக்கு மேல் தான், ஆதார் இணைக்காதவர்களும் புக் செய்யத் தொடங்க முடியும்.
வரும் 5-ம் தேதி முதல், இந்தத் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
அடுத்ததாக வரும் 12-ம் தேதி முதல், காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும்.
அதனால், உங்களது ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துவிடுவது நல்லது.
ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
IRCTC வலைதளம்
1. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு முகப்புப் பக்கத்திற்குள் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள My Account > Authenticate User-ஐ கிளிக் செய்யவும்.

3. இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டு, உங்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள்.
4. அடுத்ததாக, வலது பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் 'Save'-ஐ கிளிக் செய்யவும்.
5. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். இதை பதிவிட்டு 'Submit' கொடுத்தால் 'ALL DONE'.
குறிப்பு: ஆதார் எண்ணிற்கு பதிலாக, பான் கார்டு எண்ணைக் கூட தரலாம்.
Railone ஆப்
1. Railone ஆப்பிற்குள் செல்லவும்.
2. 'You'-ஐ கிளிக் செய்யவும்.
3. 'Link Your Aadhaar'-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், 'Verify' கொடுக்கவும்.
4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி 'Submit'-ஐ கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் ரயில்வே கணக்கு ரெடி. நீங்கள் ரிசர்வேஷன் ஓபனாகும் அன்றே சிக்கலின்றி டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.

















