செய்திகள் :

Rain alert: டிட்வா புயல்; தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்; எங்கெல்லாம் விடுமுறை?

post image

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை அந்நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் 'டிட்வா' புயலின் தாக்கத்தினால் தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்கள், குறிப்பாக டெல்டா பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதி கனமழை (ரெட் அலர்ட்)

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று (நவம்பர் 29) தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம்.

மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்)

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

கன மழை (மஞ்சள் அலர்ட்)

புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.

Rain Alert
Rain Alert

நாளை (நவம்பர் 30) ஞாயிற்றுக் கிழமைக்கான மழை எச்சரிக்கை

மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்)

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

கனமழை (மஞ்சள் அலார்ட்)

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.

இன்றும் (நவ 29) மற்றும் நாளை (நவ 30) என இந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இலங்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும், கடலோர மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

7 கி.மீ. வேகத்தில் டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இன்று காலைமுதல் நாகைக்கு தென்கிழக்கே 190 கி.மீ மையம் கொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது.

டிட்வா புயல் எச்சரிக்கை
Rain alert

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரிப்படுகை பகுதிகளை நோக்கி இன்னும் சில மணிநேரத்தில் இப்புயல் நகரும் என்று கணிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் மற்றும் நாளை இப்புயல் தீவிரமடையும் என்று வானிலை ரிப்போர்ட் சொல்கிறது.

நாளை அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, நாகை மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை அருகே வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

டிட்வா புயலின் எதிரொலியாக சனிக்கிழை (நவ 29) தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 8 மணி வரை வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி;

திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கைஉள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

மழை
மழை

திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், இராமநாதபுரத்தில் (இதுவரை 4 வட்டங்களுக்கு மட்டும்) உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி செல்லும் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு, மண்டபம், மானாமதுரை, இராமநாதபுரம் மதுரையில் இருந்து ரயில்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க

`வலுவிழந்த' காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை' அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?

சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை.இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ப... மேலும் பார்க்க