UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி - நடந்...
Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.
நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி மணிக்கு சுமார் 3 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது.
டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோயம்பத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.


















