செய்திகள் :

Rajasthan: ராஜஸ்தானில் அதிவேக புழுதிப்புயல்; வைரலான வீடியோ - காரணம் என்ன?

post image

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் மற்றும் சுரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென புழுதிப்புயல் வீசியது. அதிக வேகத்தில் இந்தப் புயல் வீசியதால், இப்பகுதிகள் முழுவதும் புழுதியால் சூழப்பட்டது.

இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளிலும் பலத்த காற்றுடன் வீசிய புழுதிப்புயலால் பகுதிகள் அனைத்தும் புழுதியால் சூழப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால், அப்பகுதியின் வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது.

குறிப்பாக, சுரு மாவட்டத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் புழுதிப்புயலால் மதியம் 2 மணிக்கே ஒட்டுமொத்தப் பகுதியும் இருட்டாக மாறி, நள்ளிரவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் பார்வைத்திறன் குறைவதால் பல வாகனங்கள் சாலையின் நடுவிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புழுதிப்புயல் பற்றி வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கையில், "ராஜஸ்தானில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இத்தகைய புழுதிப்புயல்கள் ஏற்படுவது வழக்கம்தான்.

குறிப்பாக, பாலைவனத்தின் கடுமையான வெப்பக் காற்றானது, வட இந்தியாவில் மாறிவரும் வானிலை அமைப்புகளுடன் இணையும்போது இது போன்ற தீவிர புழுதிப்புயல்கள் உருவாகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.

Dust Storm in Rajasthan
Dust Storm in Rajasthan

இந்தக் கடுமையான புழுதிப்புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள முன்னறிவிப்பில், ராஜஸ்தானின் சில பகுதிகளில் வரும் நாட்களிலும் இத்தகைய வானிலை மாற்றம் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த சூறாவளிக்காற்று மற்றும் புழுதி கிளம்பும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Miyazaki: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.3.5 லட்சம்? உலகின் காஸ்ட்லியான மியாசாகி மாம்பழம் உருவாவது எப்படி?

மாம்பழங்கள் என்றால் பல வகை உண்டு. ஆனால், சில மாம்பழங்கள் பழக்கடையில் இல்லாமல், ஒரு சொகுசு நகைக் கடையில் இருக்க வேண்டிய தகுதியுடன் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு மாம்பழம்தான் ஜப்பானின் 'மியாசாகி' மா... மேலும் பார்க்க

''மெல்ல மெல்ல அழியும் எவரெஸ்ட் சிகரம்!'' - 6 முறை ஏறிய வீராங்கனை சொன்ன அதிர்ச்சி தகவல்

பனி மூடிய இமயமலையின் சிகரங்களை ரசிப்பதும், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுச் சாதனை படைப்பதும் பல மலையேற்ற வீரர்களின் வாழ்நாள் கனவாகும். ஆனால், நாம் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் அந... மேலும் பார்க்க

நடிகர் சாயாஜி ஷிண்டே: தாயின் அன்புக்காக 6.5 லட்சம் மரங்கள் வளர்த்த `பசுமை நாயகன்!’

சினிமா உலகில் பல நடிகர்கள் புகழுக்காகவும், பணத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், திரைக்கு அப்பால் சமூகத்தின் மீதும் இயற்கையின் மீதும் தீராத அக்கறை கொண்ட ஒரு கலைஞன் இருக்கிறார். அவர்தான் பல மொழ... மேலும் பார்க்க

'Climate Change பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இது மட்டும்தான் வழி!' - City Union Bank கருத்தரங்கு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல், 'பசுமை முறை'யில் தொழிலை வளர்ப்பது குறித்து... சிட்டி யூனியன் வங்கி கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கருத்தரங்கு ஒன்றை நடத்த... மேலும் பார்க்க

மேற்கு நாடுகளில் எறும்பை வேடிக்கை பார்ப்பது ஒரு 'Hobby' - என்னது, ஒரு எறும்பின் விலை ரூ.21,000-ஆ?

'சாதாரண' எறும்பு என்று நாம் நினைக்கும் உயிரினம் விலை உயர்ந்த ஒன்றாக இருக்கிறது. கருப்பு சந்தையில் ஒரு ராணி எறும்பு ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விலை போவதாகத் தெரிகிறது.கடந்த மார்ச் மாதம், கென்யா நாட்... மேலும் பார்க்க