செய்திகள் :

Rajini: தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை; நேரில் அழைத்து தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டிய ரஜினி!

post image

ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி.

அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார்.

பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி
பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி

அத்துடன் ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரஜினி.

அதைத் தொடர்ந்து, ரஜினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

தூய்மைப் பணியாளராக இருக்கும் பத்மா, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் (தி.நகர்) பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குப்பையில் 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்தவர், அதை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி
பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி

இவரது நேர்மையைப் பலரும் பாராட்டியிருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பத்மாவை நேரில் அழைத்து, அவரது நேர்மையைப் பாராட்டியதோடு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது ரஜினியும் பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

ரஜினி தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு 'டான்' சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திற்கு செல்கிறார்.

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!

இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்த... மேலும் பார்க்க

டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! - அப்டேட்!

கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாக... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20‘துணிவு’ From Feb 20‘சூது கவ்வும்’ From Feb 20‘தெறி’ From Feb 27‘அமைதிப்படை’ Upcoming‘தம்பி’ Upcoming‘உயிருள்ளவரை உஷா’ Released‘மௌனம் பேசியதே’ Released‘மின்னலே’ Released‘காதலர் தின... மேலும் பார்க்க

Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா

'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மா... மேலும் பார்க்க