செய்திகள் :

Rajinikanth: "ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள்" - வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!

post image

மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார்.

Vyjayanthimala
Vyjayanthimala

Rajinikanth என்ன பேசினார்?

இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு 'கலாசார விருது (Cultural Award)' வழங்கப்பட்டது.

விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான அதேசமயம் எளிமையான பாணியில் மேடையில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். "ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும்" என்று பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த்

அத்துடன், கல்விச் சமூகத்தை உயர்த்தும் அடிப்படைக் காரணியாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்த விழாவில் விருதைப் பெற்ற வைஜெயந்திமாலா, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி, கலை மற்றும் மனிதநேய விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேர இணைத்த இந்த விழா, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இதயங்களை நெகிழச் செய்த ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது.

கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்

பொன் ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘கொம்பு சீவி’. இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் புதுமுக நடிகை தார்னிகா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும... மேலும் பார்க்க

படையப்பா: ``அப்பாவோட பேட்டியை நான் தான் இயக்குனேன், அதுவே.!'' - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில்... மேலும் பார்க்க

Ajith: `அஜித்தை வைத்து ரேஸிங் படமா?' - மலேசியாவில் சிறுத்தை சிவா சொன்ன பதில்!

நடிகர் அஜித் குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிற ஆசியா அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸரான நரைன் கார்த்திகேயனுடன் இ... மேலும் பார்க்க

`விஜய் அண்ணன்... விஜய் அண்ணன்தான்; எஸ்.கே தம்பி...' - நடிகர் சூரி

வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்', 'மாமன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்... மேலும் பார்க்க