செய்திகள் :

RBI வங்கி மேலாளராக கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?| வைரல் புகைப்படங்கள்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர் செஃல்பி எடுப்பதும், ஐடி கார்டு அணிந்திருப்பதும் போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.


இஷான் கிஷன் கடந்த 2017-ம் ஆண்டு தனது 18-வது வயதில், வளர்ந்து வரும் வீரராக இருந்தபோதே விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் ஆர்பிஐயில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டார். டி.ஒய். பாட்டீல் போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு தொடர்களில் ஆர்பிஐ அணிக்காக அவர் விளையாடியுள்ளார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

கிரிக்கெட் போட்டிகள் இல்லாத ஓய்வு நேரங்களில், அவர் வங்கிப் பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம். ஆர்பிஐயில் கிரேடு ஏ பிரிவில் உள்ள உதவி மேலாளர் பதவிக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.49,000 வரை வழங்கப்படுகிறது. இதனுடன் இதர படிகள் மற்றும் சலுகைகள் சேரும் போது மொத்த சம்பளம் ரூ.90,000 முதல் ரூ.1,15,000 வரை உயர்கிறது. பிடித்தங்கள் போக, இஷான் கிஷனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.75,000 முதல் ரூ.90,000 வரை கையில் சம்பளமாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Auqib Nabi: காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான முதல் வீரர் - யார் இந்த ஆகிப் நபி?

சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குச் செல்ல முடியுமா? இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் மையங்களுக்கு வெளியே வளரும் ஆயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போலவே இந்தக் கேள்வியை பலமுறை எதிர்கொண்டவர் ஆகிப் நப... மேலும் பார்க்க

10-வது ஆண்டில் TNPL: புதிய சீசன், புதிய எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் இன்று (ஆகஸ்ட் 4) திண்டுக்கல்லில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழ் திரை மற்றும் விளை... மேலும் பார்க்க

"டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள்தான்" - ரஹானே குறித்து விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திரு... மேலும் பார்க்க

Rahane: '278... Signing Off' - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே!

"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். இந்தி... மேலும் பார்க்க

Ajinkya Rahane: "கேப் எண் 278 விடைபெறுகிறது!"- ஓய்வை அறிவித்த ரஹானே

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ரஹானே இ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க