ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்...
RCB vs MI: மைதானத்தில் தகாத வார்த்தைகளைப் பேசிய RCB பயிற்சியாளர்; பிசிசிஐ-யின் நடவடிக்கை என்ன?
ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. நேற்று (மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.
இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது க்ருணால் பாண்டியா அடித்த பந்தை மும்பை வீரர்கள் திலக் வர்மா மற்றும் நமன் தீர் ஆகியோர் பிடிக்க முயன்று கோட்டை விட்டனர்.

அது சிக்ஸரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நடுவர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். இறுதியில் அது சிக்ஸர் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் கடும் கோபமடைந்த பயிற்சியாளர் ஆண்டி பிளவர், நான்காவது நடுவருடன் எல்லை மீறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
வாக்குவாதத்தின்போது எல்லை மீறிய வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த ஒரு பயிற்சியாளரே மைதானத்தில் இப்படி நாகரிகமற்ற முறையில் பேசியது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பிசிசிஐ அவரது ஊதியத்தில் 15 சதவிகிதத்தை அபராதமாக விதித்திருக்கிறது.
















