திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா... பிரசார இடமா?-...
Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை
ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை தான் பெரியளவில் உயர்ந்திருக்கும். அதற்கான ரீவைண்டைப் பார்ப்போம். ஆனால், இந்த ஆண்டு தங்கம், வெள்ளி என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தது. சொல்லப்போனால், இந்தப் போட்டியில் தங்கத்தை விட, வெள்ளி அதிக சதவிகிதம் உயர்ந்தது.
சென்னையில் இந்த ஆண்டின் முதல் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றத்தைப் பார்க்கலாம்.

ஜனவரி
2025-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.57,200 ஆகவும் விற்பனையானது.
அடுத்த இரண்டு நாள்களிலேயே (ஜனவரி 3), தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,260 ஆகவும், பவுனுக்கு ரூ.58,080 விற்கப்பட்டது.
அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, ஜனவரி 16-ம் தேதி, கிராமுக்கு ரூ.7,390 ஆகவும், பவுனுக்கு ரூ.59,120 ஆக விற்பனையாகி அடுத்த உச்சத்தைத் தொட்டது.
ஜனவரி 22-ம் தேதி, பவுனுக்கு ரூ.60,000-யும், ஜனவரி 31-ம் தேதி, பவுனுக்கு ரூ.61,000-யும் தாண்டி விற்பனையானது.
2025-ம் ஆண்டின் ஜனவரி மாதம், ஒரு கிராம் வெள்ளி ரூ.98-ல் தொடங்கி ரூ.107 வரை உயர்ந்தது.
பிப்ரவரி
பிப்ரவரி மாதம் 4-ம் தேதி கிராமுக்கு ரூ.7,810-க்கும், பவுனுக்கு ரூ.62,480-க்கும் விற்பனை ஆனது.
அடுத்த நாளே (பிப்ரவரி 5), தங்கம் கிராமுக்கு ரூ.7,905 ஆகவும், பவுனுக்கு ரூ.63,240 ஆகவும் விற்பனை ஆனது.
பிப்ரவரி 20-ம் தேதி, கிராமுக்கு ரூ.8,070 ஆகவும், பவுனுக்கு ரூ.64,560 ஆகவும் விற்பனை ஆனது.
பிப்ரவரி 19-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,000-த்தை தொட்டது. இவை நான்கும் பிப்ரவரி மாதத்தின் உச்சங்களாகும்.
மார்ச்
மார்ச் மாதம் 14, 18, 31-ம் தேதிகளில் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டது. 14-ம் தேதி பவுனுக்கு ரூ.65,840 ஆகவும், 18-ம் தேதி பவுனுக்கு ரூ.66,000 ஆகவும், 31-ம் தேதி பவுனுக்கு ரூ.67,400 ஆகவும் விற்பனை ஆகி உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.105 முதல் ரூ.113 வரை சென்றது.

ஏப்ரல்
ஏப்ரல் மாதம் பவுனுக்கு 1-ம் தேதியே புதிய உச்சம் தான். ஒரு பவுன் தங்கம் ரூ.68,080-க்கு விற்பனையானது.
ஒரு பவுன் தங்கம் 11-ம் தேதி 69,960-க்கும், 12-ம் தேதி ரூ.70,160-க்கும் விற்பனை ஆனது.
ஏப்ரல் 10-ம் மற்றும் 12-ம் தேதிகளில் மட்டும் இரண்டு நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 உயர்ந்திருந்தது.
அடுத்து 17, 21, 22-ம் தேதிகளில், பவுனுக்கு முறையே ரூ.71,360-க்கும், ரூ.72,120-க்கும், ரூ.74,320-க்கும் விற்பனை ஆனது.
இவை அனைத்துமே ஏப்ரல் மாதத்தின் உச்சங்களாகவும்.
ஏப்ரல் மாதம் வெள்ளி விலை பெரும்பாலும் இறங்குமுகமாகவே இருந்தது.
மே
மே மாதம் தங்கம் விலை இறங்குமுகத்தில் தான் இருந்தது. பவுனுக்கு ரூ.68,880 வரை சென்றது. வெள்ளி விலையும் அதே நிலையில் தான் இருந்தது.
ஜூன்
ஜூன் மாதம் சற்று ஏறியது தங்கம் விலை. பவுனுக்கு ரூ.74,360 வரை ஏற்றத்தில் சென்றது. ஆனால், அது விட்ட இடத்தைப் பிடிப்பது போன்றது தான். ஆனால், ஜூன் மாதம் வெள்ளி நல்ல ஏற்றத்தைக் கண்டது. கிராமுக்கு ரூ.122 வரை சென்றது.
ஜூலை
ஜூலை 23-ம் தேதி மட்டும், பவுனுக்கு ரூ.75,040 ஆக விற்பனை ஆனது. இது புதிய உச்சம்.
மேலும், ஜூலை 1-ம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,000-ஐ தாண்டி நடைப்போட தொடங்கியது.

ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாட்தம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.73,000-ல் இருந்து ரூ.75,000 வரை விற்பனை ஆன்னது.
இன்னொரு பக்கம், வெள்ளி புதிய புதிய உச்சங்களைத் தொட்டு, கிராமுக்கு ரூ.134 வரை சென்றது.
செப்டம்பர்
செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்தே உச்சங்கள் தான்.
செப்டம்பர் 1, 3, 6, 9,16, 23,27, 30 தேதிகளில் பவுனுக்கு முறையே ரூ.77,640, ரூ.78,440, ரூ.80,040, ரூ.81,200, ரூ.82,240, ரூ.84,000, ரூ.85,120, ரூ.86,880 என விற்பனை ஆனது.
இவை அனைத்துமே உச்சங்கள் ஆகும்.
வெள்ளி விலை ரூ.161 வரை சென்றது.
அக்டோபர்
செப்டம்பர் மாதிரி, அக்டோபர் முதல் தேதியிலேயே புதிய உச்சம் தான்.
செப்டம்பர் 1-ம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.87,120-க்கு விற்பனை ஆனது.
6, 8, 14, 17 தேதிகளில் முறையே ரூ.88,480, ரூ.90,400, ரூ.94,600, ரூ.97,600 ஆகவும் விற்பனை ஆனது.
இந்த மாதம் வெள்ளி விலை ரூ.207 வரை சென்றது. இதே மாதம் தான் தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,000-த்தை தாண்டி அடியெடுத்து வைத்தது.
அக்டோபர் 20-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு பிறகு, தங்கம் விலை இறங்குமுகத்தை நோக்கி நகர தொடங்கியது.
நவம்பர்
நவம்பர் மாதம் பெரியளவில் மாற்றமில்லை.

டிசம்பர்
டிசம்பர் மாதம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. அது டிசம்பர் 15-ம் தேதியன்று.
டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்கு மேல் ஏறுமுகத்தில் தான் இருந்தது தங்கம் விலை. அது பவுனுக்கு ரூ.1,04,000-த்தை தாண்டி சென்றது.
ஆனால், கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
தற்போது தங்கம் கிராமுக்கு ரூ.12,480 ஆகவும், பவுனுக்கு ரூ.99,840 ஆகவும் விற்பனை ஆகிறது.
கிராமுக்கு ரூ.281 வரை சென்ற வெள்ளி விலை இன்று ரூ.257-க்கு இறங்கி உள்ளது.
ஆக, 2025-ம் ஆண்டு மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.5,080-உம், பவுனுக்கு ரூ.46,960-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.183 உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டும் (2026), தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!




















