செய்திகள் :

RGS VET: பசுவுக்கும் தீபாவளி! நான்காம் ஆண்டாக 'கோ-ஸ்வஸ்தி' - இந்தியாவின் முதல் மாட்டு லட்டு

post image

"நாம் சாப்பிடும் லட்டில் இருக்கும் நெய்யைத் தந்தது யார்? பசு. ஆனால் அந்தப் பசுவுக்கு என்றாவது ஒரு லட்டு கிடைத்திருக்கிறதா?"

இந்த ஒரு எளிய கேள்விதான் ஒரு புதிய தீபாவளி மரபைப் பிறப்பித்தது. நம் வீட்டு இனிப்புகளுக்குப் பால் தந்து, தீபங்களுக்கு நெய் தந்து, ஆண்டு முழுவதும் நம் வாழ்வின் ஆதாரமாக நிற்கும் கோமாதாவுக்கும் தீபாவளி இனிப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் 'கோ-ஸ்வஸ்தி' - மாடுகளுக்கான இந்தியாவின் முதல் லட்டு.


ஈரோட்டில் 1979-ல் தாத்தா கணபதி செட்டியார் சிறிய ஆலையாகத் தொடங்கிய R.G. சுந்தர் & கோ (RGS Feeds), இன்று "காமதேனு" மாட்டுத்தீவனம் மூலம் தென்னிந்தியா முழுவதும் விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதன் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரும், RGS வெட் நியூட்ரசூட்டிக்கல்ஸ் கோய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ராமமூர்த்தி அவர்களின் சிந்தனையில் உருவான இந்த முயற்சி, இந்த தீபாவளியோடு நான்காம் ஆண்டை எட்டுகிறது.


ஒரு கேள்வியில் பிறந்த லட்டு

“ஒவ்வொரு தீபாவளிக்கும் எங்கள் டீலர்களுக்கும் விவசாயிகளுக்கும் பரிசு தருவது எங்கள் வழக்கம். ஒருநாள் தோன்றியது - விவசாயத்தின் தூணாக நிற்கும் பசுக்களுக்கு மட்டும் ஏன் இனிப்பு இல்லை? எங்கள் R&D குழுவும் கால்நடை மருத்துவர்களும் இணைந்து பல சோதனைகளுக்குப் பிறகு உருவாக்கியதுதான் இந்த லட்டு. ஆண்டு முழுவதும் காமதேனு தீவனம் சாப்பிடும் மாடுகளும் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறோம்."
- ராமமூர்த்தி, தலைமைச் செயல் அதிகாரி, RGS வெட் நியூட்ரசூட்டிக்கல்ஸ் கோய்

இனிப்பிலும் சத்து மாடுகளுக்குப் பிடித்த சுவையில் வெல்லப்பாகு, தவிடு, மக்காச்சோள மாவு, ஈஸ்ட், வைட்டமின்கள், மூலிகைகள் மற்றும் தாதுக்கள் கலந்து இந்த லட்டு உருண்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, மாடுகள் விரும்பி உண்ணும் பலாப்பழக் கூழ் சுவையுடன் 'கோ-ஸ்வஸ்தி' வருகிறது. ஒரு லட்டு மூலம் ஒரு மாட்டிற்கு ஒரே சமயத்தில் சுமார் 30 கிராம் தாது மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன. இது வெறும் இனிப்பு அல்ல; அன்பும் ஆரோக்கியமும் சேர்ந்த ஒரு பரிசு.


விவசாயிகளின் மனம் நிறைந்த வரவேற்பு காமதேனுவின் தாரக மந்திரம் "நலமான பசு - வளமான விவசாயி". அதன் வழியே, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த லட்டுக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. "தீபாவளிக்கு எங்களுக்குப் பல இடங்களில் இருந்து இனிப்புகள் வருகின்றன. ஆனால் எங்கள் மாடுகளையும் நினைத்து இனிப்பு அனுப்பியது காமதேனு மட்டும்தான்" என்று விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.


அடுத்த கட்டம்: லட்டு வடிவில் ஆரோக்கியம் இனிப்போடு நின்றுவிடாமல், மாடுகள் நேரடியாகச் சாப்பிட மறுக்கும் மருந்துகளையும் லட்டு வடிவில் தரும் திட்டத்தில் நிறுவனம் இறங்கியுள்ளது. பொங்கல் சமயத்தில் மாடுகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கான லட்டு, குடற்புழு நீக்க லட்டு போன்றவை அடுத்து வர உள்ளன.


உங்கள் வீட்டுத் தீபாவளியிலும் கோமாதா உங்கள் அருகில் உள்ள கோமாதாவுக்கு - வீட்டிலோ, தோட்டத்திலோ, கோசாலையிலோ, கோயிலிலோ ஒரு 'கோ-ஸ்வஸ்தி' லட்டு ஊட்டி, அவளின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். அந்த இனிய தருணத்தை செல்ஃபியாக எடுத்து #FirstLadduForGomata என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள்; எங்களுக்கும் 97897 74166 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்புங்கள்.

“ஆ காவோ அக்மன் உத பத்ரம் அக்ரன்" - பசுக்கள் வந்தன, நமக்கு நன்மையைக் கொண்டு வந்தன. (ரிக் வேதம் 6.28.1)

கோமாதா மகிழும் இடத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள்.

தீபாவளி காற்று மாசுபாடு: ``பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission" - பூவுலகின் நண்பர்கள்

இந்தியா முழுவது தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதேநேரம், வாணவேடிக்கை, பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களால் காற்று மாசு முந்தையை ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என மாசுக்கட்டுப்பாட்... மேலும் பார்க்க

கோவை: நொய்யலில் ரசாயன நுரை… சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் | Photo Album

நொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரைநொய்யலில் ரசாயன நுரை... மேலும் பார்க்க

நீலகிரி: மழையில் சரிந்த‌ பாறைகள், மண்ணில் புதைந்த அரசு பேருந்து! உருக்குலைந்த பார்லியார் பகுதிகள்

கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை பாதிப்பு கனமழை... மேலும் பார்க்க

4 லட்சம் மரங்கள் அழிப்பு? AI டேட்டா சென்டருக்காக பலியாகும் இயற்கை - பின்லாந்தில் சிக்கலில் கூகுள்!

செயற்கை நுண்ணறிவு, தேடுபொறிகள் மற்றும் இணையச் சேவைகளின் அதிவேக வளர்ச்சிக்கு பிரம்மாண்டமான கணினித் திறனும் தரவு மையங்களும் (Data Centers) தேவைப்படுகின்றன. இதற்காகப் பெரிய அளவிலான தரவு மையங்களை அமைப்பதி... மேலும் பார்க்க

Rain Alert: கொட்டித் தீர்த்த கனமழை; நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் | Album

சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் வி... மேலும் பார்க்க