செய்திகள் :

Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்

post image

இன்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.

இந்த அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. சேவா தீர்த்தின் பொன்மொழியாக, 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

சேவா தீர்த் பகுதியில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகங்கள், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் அலுவலகங்கள் ஆகியவை ஒன்றாக அமைந்திருக்கும்.

இதுவே இந்தப் புதிய மாற்றத்தின் சிறப்பம்சம்.

மோடி
மோடி

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. இதனால், பல்வேறு நடைமுறைகள் இருந்தன. இதை சரிசெய்யவும்... அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை எளிதாக்கவும் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது.

புதிதாக திறந்துள்ள சேவா தீர்த்தில் நான்கு முக்கிய கையெழுத்துகளைப் போட்டுள்ளார் மோடி...

1. PM RAHAT திட்டம் - இந்தத் திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் காயம்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் சிகிச்சை இலவசம்.

2. லட்சாதிபதி தீதி டார்கெட் - 2029-ம் ஆண்டிற்குள் 6 கோடி பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்க வேண்டும்.

3. விவசாயக் கட்டமைப்பு நிதி: இந்த நிதி ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

4. ஸ்டார்ட் அப் இந்தியா நிதிகளின் நிதி: புதிய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிதாக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

5,000 ரூபாய் அறிவிப்பு: `பென்' கொடுத்த அழுத்தம்; சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி - செயலாக்கிய டீம்!

'இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த 2 மாதம்… அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு, மேலும் 2 ஆயிரம் ரூபா... மேலும் பார்க்க

Vijay: தவெக தலைவர் விஜய்-ன் சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் | Photo Album

மக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்திப்பு நடைபெற்றதுமக்கள் சந்த... மேலும் பார்க்க

'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த தி... மேலும் பார்க்க

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, `` `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்... மேலும் பார்க்க

TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,00... மேலும் பார்க்க