'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan E...
SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" - தமிழிசை விளக்கம்!
தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று (3-ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றியபோது:
திமுக கூட்டணி வாக்குகளெல்லாம் நீக்கப்படவிருப்பதாகவும், சிறுபான்மையினரின் வாக்குகள் நீக்கப்படவிருப்பதாகவும் திமுக பொய் பிரசாரம் செய்துவருகிறது.
பீகாரில் 64 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள், வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்கள்.
ஆனால், தேர்தல் ஆணயம் தெளிவாக 'வாக்காளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு யாருமே தங்களது வாக்குகள் பறிக்கப்பட்டுவிட்டது எனக் கூறவே இல்லை' எனத் தெரிவித்திருக்கிறது.
இறந்த வாக்காளர்கள், இரண்டு பதிவு வாக்காளர்கள், மாற்று இடத்தில் இருந்து வந்த வாக்காளர்கள் ஆகியவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் நல்லது எதுவுமே நடக்கக்கூடாது என திராவிட மாடல் அரசு கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறது.
ஆனால், முதல்வர், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தலைவர்கள், செல்வ பெருந்தகை என எல்லோருமே ஒரே மாதிரி பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜக-விற்கு பயந்து கொண்டு சில கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வரவில்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா அதிமுக, பாமக, தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் எதுவும் பா.ஜ.க-வுக்கு பயந்து வரமாலில்லை.
அந்தக் கூட்டத்துக்கு வந்த 41 பேரும் முதலமைச்சருக்கு பயந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் தமிழன் வளர்ச்சியை பார்ப்பதை விட வசனங்களை பார்த்து மகிழ்கிறான், கொள்கைகளை விட கோஷங்களை பார்த்து மகிழ்கிறான்.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் வாக்காளர் திருத்தத்தை செய்ய முடியாது எனத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஒரு தேர்தல் அதிகாரியிடம் பேசினேன். அவர் 'எதற்கு இந்த சிறப்பு சீர்திருத்த இயக்கத்தை நாங்கள் ஆரம்பிக்கிறோம் என்ற விளக்கத்தை மக்களுக்கு தெரிவித்தால் போதும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது' என்றார்.
21 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த SIR நடத்தப்பட்டிருக்கிறது. அதனால் இறந்தவர்கள், வேறு ஊருக்கு போனவர்கள் எல்லாம் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் நீக்கினால் நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். அதே நேரத்தில் 18 வயது வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்
உச்ச நீதிமன்றம் செல்வோம் எனக் கூறுகிறார்கள். தேர்தல் ஆணயம் ஒரு சட்டபூர்வ அமைப்பு. அதனால், எந்த உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ தேர்தல் ஆணையத்தை தடுக்காது என்பதைத்தான் பல மாநில வழக்குகளின் தீர்ப்புகள் மூலம் புரியமுடிகிறது.
தி.மு.க இரண்டு வருடமாக, ஒரு பூத்துக்கு 200 பேராவது அதிகம் இருக்க வேண்டும் என ஒரு பொய் தீவிர வாக்காளர் இயக்கத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த தீவிர வாக்காளர் பதிவுக்கு பயப்படுகிறார்கள்.

நடக்கப்போகும் தேர்தலில் நல்லவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகம் நிச்சயம் காப்பாற்றப்படும். நான் ஆளுநர் பதவியை விட்டு தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என இங்கே வந்திருக்கிறேன்.
பல மாநிலங்களை பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. EVM மிஷின் மூலம் பா.ஜ.க வெற்றிபெற்றுவிட்டது எனக் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் உதய சூரியன் சின்னத்தில் நிங்களே ஓட்டு போட்டுக் கொண்டீர்களா? தமிழ்நாட்டில் எப்படி தி.மு.க வென்றது." எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.















