செய்திகள் :

"'sonஆதன' சிம்மாசனங்களுக்கு சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை!"- உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி

post image

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை 'சோஃபா மாடல்' அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், தவெக அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே...

திமுக - உதயநிதி ஸ்டாலின்
திமுக - உதயநிதி ஸ்டாலின்

அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.

சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது! தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!" என்று விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

உ.பி: 'சமாஜ்வாதி கட்சி பிளவுபடுகிறதா?'- பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்; அகிலேஷ் யாதவ் பதிலடி!

சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறிய நிலையில், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார். உத்தரப் ப... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு - யார் அந்த மூவர்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ... மேலும் பார்க்க

டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" - சாடும் ராகுல் காந்தி!

சமீபத்தில் நடந்த நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வுகளின் வினாத் தாள் கசிந்த விவகாரமும், அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரமும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்தேர்வு ஜூன் 21-ம் தே... மேலும் பார்க்க

"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.அதையடுத்து ஆகாஷ் டெலிச... மேலும் பார்க்க

"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் உள்ள... மேலும் பார்க்க