செய்திகள் :

SRH Vs CSK: "நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆனால்!"- வெற்றி குறித்து இஷான் கிஷன்

post image

ஐபில் தொடரின் நேற்றையப் (ஏப்ரல்.18) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.

SRH vs CSK
SRH vs CSK

இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் இஷான் கிஷன், " மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் அணியில் உள்ள திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் அவர்களின் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

அவர்களே சொந்தமாகத் திட்டங்களை உருவாக்கி, அதற்கேற்ப பந்து வீசுகிறார்கள். இதனால் ஃபீல்டிங் அமைப்பதில் கேப்டனுக்கு அழுத்தம் குறைகிறது.

அவர்கள் ஆட்டத்தை முன்கூட்டியே கணித்துச் செயல்படுகிறார்கள். எங்கள் அணியின் வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் அவர்கள் கடினமாக உழைப்பதையும், நாளுக்கு நாள் முன்னேறுவதையும் நான் பார்க்கிறேன்.

இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் நல்ல ஆடுகளம். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

SRH vs CSK
SRH vs CSK

இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. உண்மையைச் சொன்னால் நாங்கள் இப்போது புள்ளி பட்டியலைப் பார்ப்பதில்லை. இது மிக நீண்ட தொடர் என்று எனக்குத் தெரியும்.

நாங்கள் அமைதியாக, ஒவ்வொரு போட்டியாக கவனித்து விளையாட விரும்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.." என பேசியிருக்கிறார்.

'எப்படி வீரர்களை அலட்சியமாகக் கையாள முடிகிறது'; காயத்துடன் ஆயுஷ் - CSK நிர்வாகத்தை சாடிய அஷ்வின்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முழங்காலில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் கடுமையாக சாடியிருக்கிறார். ஹை... மேலும் பார்க்க

SRH Vs CSK:`So Close Yet So Far' என்ற ரீதியில் ஒரு வெற்றி வாய்ப்பைத் தாரை வார்த்திருக்கிறது சிஎஸ்கே

இரு அணிகளும் ஒரே புள்ளிகளில் இருந்ததால் சிஎஸ்கே வெற்றி பெறவும் புள்ளிப் பட்டியலில் ஏணி போட்டு மேலே ஏறவும் வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் நினைக்க, "வாய்ப்பில்ல ராஜா" டெம்ப்ளேட்டைக் கொண்டு பாம்பாக ரசிகர... மேலும் பார்க்க

அனுபவத்தை முறியடிக்கும் வேகம்; ஐபிஎல் 2026-ஐ அதிரவைக்கும் Gen Z நட்சத்திரங்கள் ஒரு பார்வை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது எப்போதும் திறமைகளை அடையாளம் காணும் ஒரு களமாகவே இருந்து வருகிறது. ஆனால், 2026 சீசன் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. கிரிக்க... மேலும் பார்க்க

MI VS PBKS: பறந்து கேட்ச் பிடித்த ஷ்ரேயஸ்; வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்; ஷாக் ஆன MI! | வீடியோ

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.குறிப்... மேலும் பார்க்க

MI vs PBKS: "இப்போ என்ன சொல்றதுனே தெரியவில்லை..." - தொடர்ச்சியான தோல்விகள் குறித்து ஹர்திக் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் தொடர்ந்து நான்கு தோல்விகள... மேலும் பார்க்க

MI vs PBKS: "அந்தத் திறமை எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது" - வெற்றிக்கான ரகசியத்தைச் சொன்ன ஸ்ரேயஸ்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 16) ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்ட... மேலும் பார்க்க