செய்திகள் :

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

post image

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது.

சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

Surya 47
Surya 47

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

அதாவது, “ 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல.

நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத் தான் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து 'ஆவேசம்-2' குறித்து பேசிய அவர், " தற்போது முழுக் கவனமும் ‘சூர்யா 47’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறேன்.

‘ஆவேசம் 2’ குறித்த ஆரம்பக்கட்ட யோசனைகள் இருந்தாலும், அது இப்போதைக்குத் தொடங்கும் நிலையில் இல்லை.

ஜித்து மாதவன்
ஜித்து மாதவன்

சூர்யாவின் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கப் போகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Lucky The Superstar Review: கலகல வசனம் பேசும் நாய்கள்; படத்தின் பரீட்சார்த்த முயற்சி கைகூடுகிறதா?

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தேங்காய் ஸ்ரீனிவாசன் (சுப்பு பஞ்சு) மனைவி (தேவதர்ஷினி), குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய குழந்தை அம்மு (மேக்னா சுமேஷ்) ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்... மேலும் பார்க்க

`முத்தமழை இங்கு கொட்டி தீராதோ'..! சென்சேஷனல் ஹிட் பாடல் உருவானது எப்படி? | வரித்துணையே 03

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

`முதல்வர் கலந்துகிடுவார்னு தெரிஞ்சிருந்தா கல்யாணத்தை பெரிசா பண்ணியிருப்பேன்!' - நடிகர் டெலிபோன் ராஜ்

சென்னையில் நேற்று நடந்த நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தன் திருமணத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொள்வாதாக இருந்ததாம். ஆனால் கடை... மேலும் பார்க்க

KH x RK Update: விரைவில் ஒரு Glimpse Video; நெல்சன் க்ளிக் ஆக இதான் காரணம்! ஷூட்டிங் எப்போது?

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் 47 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன் ஆகும் 'KH x RK' படத்தின் புரொமோ வீடியோ இன்று வைரலாகியுள்ளது.நெல்சன் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ர... மேலும் பார்க்க

Chiyaan Vikram: "சில நேரங்களில் மௌனம்..." - அடுத்தடுத்த 4 படங்கள்; அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு செய்திருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிப்புக்காக உடலை வருத்திக்கொண்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு இவர் ஒரு உதாரணம் என ரசிக... மேலும் பார்க்க

`கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பட... மேலும் பார்க்க