செய்திகள் :

Taapsee Pannu: ``வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது?" - நடிகை டாப்சி

post image

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி பண்ணு. இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில் தன் திரை அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் பேட்டியில், ``ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்துக்கு ஒப்பந்தமாகியிருந்தேன். பிறகு திடீரென நீக்கப்பட்டேன். ஏன் எனக் கேட்டபோது 'அந்த ஹீரோவின் மனைவிக்கு உங்களைப் பிடிக்கவில்லை' என்றார்கள். அந்த நடிகரின் மனைவிக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்று எனக்கு இன்றுவரை தெரியாது.

 டாப்சி பண்ணு
டாப்சி பண்ணு

மற்றொரு படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகித் என் கால்ஷீட்டையும் ஒதுக்கிய நிலையில், எனக்குத் தெளிவான எந்தக் காரணமும் கூறப்படாமல் படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டேன். கதாநாயகனின் அழுத்தம் காரணமாகவே நான் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதினேன். ஆனால், ஊடகங்கள் வாயிலாகவே நான் அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். ராசி இல்லாத நடிகை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கொண்டிருக்கிறேன்.

திரைத்துறைக்கு வந்த புதிதில் எனக்கு சினிமா அனுபவம் இல்லாததால், படப்பிடிப்பில் நடப்பவை அனைத்தும் திரைத்துறையின் இயல்பான நடைமுறை என்றே நினைத்தேன். படப்பிடிப்பின் போது ஒரு காட்சி மிகையான பாலியல் தன்மையுடன் எடுக்கப்படுகிறது என்பதை அனுபவமின்மையால் என்னால் உணர முடியவில்லை.

 டாப்சி பண்ணு
டாப்சி பண்ணு

படம் வெளியாகித் திரையில் பார்க்கும்போதே, அது தேவையற்ற முறையில் படமாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன். தெலுங்கில் அறிமுகமான படத்தில், கவர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் கூறி என் வயிற்றின் மீது தேங்காய் எறியப்பட்டது. வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை" எனத் தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.

The Paradise: "நீங்கள் செய்த ட்ரோல்களையும் அதே அளவு ரசித்தேன்!" - நானியின் பதிவு

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. The Paradise Movieதிரைப்படம் வெளியான நாள் முதல், எதிர்மறையான வ... மேலும் பார்க்க

The Paradise: "எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகள், இடைவிடாத உழைப்பு!" - நெகிழும் நானியின் மனைவி

நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், திரையுலகில் நானியின் 16 ஆண்டுகாலப் போராட்டம் குறித்து அவரின் மனைவி அஞ்சனா எலவர்த்தி சமூக வலைதளப் ப... மேலும் பார்க்க

'The Paradise படத்தில் தண்ணீருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி இருக்கிறதா?' - நானி சொல்வது என்ன?

'தசரா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகிற 24-ம் தேதி திரைய... மேலும் பார்க்க

Varun Tej: "நீ வந்த பின்தான்... அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் - லாவண்யா தம்பதி

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. Varun Tej - Lavanya Tripathi's Sonத... மேலும் பார்க்க

Allu Arjun: "சேலை அணிந்து நடிக்க வேண்டும் என பயமாக இருந்தது; ஆனால்..." - அல்லு அர்ஜுன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம். அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது. புஷ்பா 2இத்தி... மேலும் பார்க்க

``காதலித்தேன்... தோல்வியடைந்தேன்... மதுகுடித்தேன்..." - பர்சனல் பகிர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்க... மேலும் பார்க்க