செய்திகள் :

Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா

post image

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் பாலிவுட்டில் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.

“பு​தி​தாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்​கள் மிகவும் அழகாக இருக்​கிறீர்​கள், பெரிய கதா​நாயகி​யாக வரு​வீர்​கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறுவார்கள்.

தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா

உங்​கள் திறமை​யைப் பாராட்டுவதுபோல் வந்து, ‘அவரைப் போய் பாருங்​கள், இவரைச் சந்​தி​யுங்​கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்​பு​வார்​கள். இது​தான் பாலிவுட்டில் நடக்கிறது.

அறி​முகம் இல்​லாதவர்​கள் சாக்​லேட் கொடுத்தால் வாங்​கக் கூடாது என்று சிறு​வய​தில் பெற்றோர் சொல்​லிக் கொடுத்​ததை நினை​வில் கொள்ளுங்​கள்.

இங்கே கொடுக்​கப்​படு​வது உண்​மை​யான சாக்​லேட் அல்ல, அது உங்​கள் லட்​சியங்​களை​யும், ஆசைகளை​யும் முதலீ​டாகக் கொண்டு வீசப்​படும் வலை. ஏராளமான ஆண்​களும் பெண்​களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்​படுத்​தப்​பட்​டு, துஷ்பிரயோகம் செய்​யப்​பட்​டு, பின்​னர் தூக்கி வீசப்படுகிறார்​கள்.

தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா

அப்​படி வீசப்​படும்​போது, சிலர் மீள முடி​யாத பாதிப்​புக்கு உள்​ளாகிறார்​கள். சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள். இன்​னும் சிலர் மனரீ​தி​யாக உடைந்து, சொந்த ஊருக்​கே திரும்பி விடு​கிறார்​கள்" என்று பாலிவுட் குறித்து பேசியிருக்கிறார்.

Akshay Kumar: "சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா?" - அக்‌ஷய் குமாரின் பதில் என்ன?

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நட... மேலும் பார்க்க

Aamir Khan: 'ஆமிர் பாய்க்கு...' - 61வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடிய ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 61வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை ஆமீர் கான் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் ஆமிர் கானின்... மேலும் பார்க்க

"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா வைரல் பெண் மோனலிசா

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி ... மேலும் பார்க்க

Dhurandhar 2: "தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியில்.!" - ராம் கோபால் வர்மா

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து, தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தை மாற்றியம... மேலும் பார்க்க

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் Spirit மற்றும் Kalki 2898 ADபோன்ற சில படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுக... மேலும் பார்க்க

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ... மேலும் பார்க்க