செய்திகள் :

TATA: ``எங்களுக்கு எந்தப் பயனுமில்லை..." - டாடா நிறுவனத்தை மூட கென்யா அதிபர் முடிவு!

post image

கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு கென்யாவின் காஜியாடோ (Kajiado) மாவட்டத்திற்கு உட்பட்ட மகாடி பகுதிக்குச் சென்ற அதிபர் ரூட்டோ, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, `` டாடா நிறுவனம் சுமார் 100 ஆண்டுகால ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால், காஜியாடோ பகுதியில் அவர்கள் எந்த ஒரு தொழிற்சாலையையோ வளர்ச்சித் திட்டங்களையோ கட்டமைக்கவில்லை.

டாடா
டாடா

நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா? எனவே, டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்திற்குப் பதிலாக இரண்டு புதிய நிறுவனங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். ஒரு நிறுவனம் இங்குப் பெரிய கண்ணாடி உற்பத்தி ஆலையையும், மற்றொரு நிறுவனம் இரசாயனத் தொழிற்சாலையையும் அமைக்கும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கென்யாவில் இயங்கும் டாடா கெமிக்கல்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ``கென்ய அரசின் அதிகாரத்திற்கு மதிப்பு அளிப்பளிக்கிறோம். சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை வழிகள் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விதிகளுக்கும் முறையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், மகாடி பகுதி மக்களின் நலன் மற்றும் கென்யாவின் பொருளாதார வளர்ச்சியே தங்களின் முக்கிய முன்னுரிமை." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாத இறுதியில், டாடா குழுமத்தின் மகாடி சோடா தொழிற்சாலையின் செயல்பாடுகளையும், சோடா ஆஷ் (Soda Ash) ஏற்றுமதியையும் நிறுத்துமாறு கென்ய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

வில்லியம் ரூட்டோ

உள்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் கென்யா அரசு, வெளிநாட்டினர் சிறுவணிகம் செய்யவும் தடை விதித்திருக்கிறது. அதற்கான அனைத்து சட்டப் பாதைகளையும் அடைக்கும் வகையில் சட்ட மசோதாவும் கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டின் மூலதனத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவுமே பயன்படுத்தப்பட வேண்டும்' என என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர். கட்சி மறுசீரமைப்புக்க... மேலும் பார்க்க

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் க... மேலும் பார்க்க

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு - கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன் (56). இவர் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யில் இடுக்கி மற்றும் கட்டப்பனை பணிமனைகளில் ஓட்டுநராகத் தனது ச... மேலும் பார்க்க

``கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலா... மேலும் பார்க்க

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" - நயினார் தாக்கு

திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூ... மேலும் பார்க்க