செய்திகள் :

TN Assembly : 'நைட்டெல்லாம் தூங்க முடியல!' - அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலரும் 'நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே...' என அவையிலேயே குமுறி வருகின்றனர். காரணம் என்ன?

Senthil Balaji
Senthil Balaji

மானியக்கோரிக்கையில் ஒரு நாளைக்கு 2 துறைகள் தொடங்கி 6 துறைகள் வரைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவையில் விவாதிக்கப்படுகிறது. ஒரு துறை சம்பந்தமான விவாதத்துக்காக அவை கூடுவதற்கு முன்பே 'கொள்கை விளக்கப் புத்தகம்' அளிக்கப்பட வேண்டும். அந்தப் புத்தகத்தில் துறையின் தற்போதைய நிலவரம் மற்றும் திட்டங்கள் குறித்த தரவுகள் இருக்கும்.

அதை எம்.எல்.ஏக்கள் படித்துவிட்டு வந்து அவையில் பேசும்போது விரிவாக தங்களின் கருத்துகளை பேசுவார்கள். ஆனால், இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொள்கை விளக்கப் புத்தகம் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதால் அந்தப் புத்தகத்தை படித்து வர சிரமமாக இருக்கிறதென எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மின் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'இன்று 6 துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. ஆனால், கொள்கை விளக்கப் புத்தகம் நேற்றிரவு 10 மணிக்குதான் வழங்கப்பட்டது. 6 துறைகளுக்கும் சேர்த்து 834 பக்கங்கள் இருக்கிறது. அதை படித்து முடிக்க இரவு 3:30 மணி ஆகிவிட்டது. மூன்றரைக்கு தூங்கி ஐந்தரை மணிக்கு எழுந்தரித்து அவைக்கு வந்திருக்கிறேன். அதனால் சீக்கிரமே கொள்கை விளக்கப் புத்தகங்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

EPS
EPS

அதேமாதிரி, இன்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இன்றைக்கு 6 துறைகளின் மீதான விவாதம் நடக்கிறது. ஆனால், கொள்கை விளக்கப் புத்தகங்கள் நேற்றிரவு 8 மணிக்குதான் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நாங்கள் எப்படி அந்த புத்தகங்களை படித்து வந்து சீராக விவாதிக்க முடியும்?' என்றார்.

இதேமாதிரியாக நிறைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கொள்கை விளக்கப் புத்தகம் தாமதமாவதால் இரவு தூக்கத்தை தொலைக்கிறோம் என அவையிலேயே குமுறுகின்றனர்.

உறுப்பினர்களின் குறைகளை கேட்டுக் கொண்ட சபாநாயகர், '24 மணி நேரத்துக்கு முன்பாக கொள்கை விளக்கப் புத்தகத்தை வழங்கக்கோரி அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துகிறேன்' என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க