செய்திகள் :

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

post image

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

டிரம்ப்
டிரம்ப்

அதாவது ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி'ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா,

ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப்
டிரம்ப்

இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன.

அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா
இந்தியா

பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெ... மேலும் பார்க்க

Vibe With MKS: "எனக்கு பிடித்த கார்.!"- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இர... மேலும் பார்க்க

"பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல்" - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்

வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். அடம் பிடித்த ட்ரம்ப்தனக்கு அமைதிக்... மேலும் பார்க்க

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடை... மேலும் பார்க்க

Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அ... மேலும் பார்க்க

I-PAC: ``மம்தா தலையீடா? அமலாக்கத்துறை அவசரமா?" - உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்!

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் ‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநர் பிரதிக் ஜெயின். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவன... மேலும் பார்க்க