செய்திகள் :

TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?

post image

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து வசதியின்றி சிரமப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காகப் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் மணல் கொள்ளை மூலம் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றன. எவ்வித ஆதாரமும் இல்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை;

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே சில ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்கள் தலைவருக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை. மக்கள் ஏற்கனவே தேர்தல்கள் மூலம் அவர்களுக்குரிய பதிலைக் கொடுத்துவிட்டார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மக்கள் சேவைக்காகவும் தொகுதிப் பிரச்னைகளை நேரில் சென்று பார்வையிடவும் அரசு சார்பில் வாகன வசதி செய்து தருவது அவசியமானது. வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் முதல் உள்ளாட்சித் தலைவர்கள் வரை அரசு வாகனம் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் பணியாற்ற அந்த வசதி தேவையாக இருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரத்தில் எதிர்த்து வாக்களிப்போம் என்று தி.மு.க இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது மற்றும் சுமுகமான சந்திப்புகள் என தி.மு.க ஏற்கனவே பாஜகவின் மறைமுகக் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.

இந்தியாக் கூட்டணியைப் பொறுத்தவரை தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் மட்டுமே இணைந்து முடிவெடுத்து வருகின்றன. தேர்தல் முடிந்து த.வெ.க எம்.பி-க்கள் வெற்றி பெற்ற பிறகு கூட்டணியில் இணைந்து செயல்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க