செய்திகள் :

TVK: 'எங்க வீட்டு பிள்ளை' விஜய் ஆட்சி அமைக்க ஆதரவா? - பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில் என்ன?

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளைத் தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

தவெக விஜய்
தவெக விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கப்படுமா என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "புதிதாக ஆட்சி அமைக்கப்போகிறவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகள். நிறைய சவால்கள் இருக்கின்றன. அந்தச் சவால்களை அவர் நிரூபிக்க வேண்டும். அவருக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகள்.

நாங்கள் மதசார்பற்றக் கூட்டணிதான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருந்தாலும் நான் எப்போதும் சொல்வதுபோல விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை அவரது வெற்றிக்கு வாழ்த்துகள்.

 பிரேமலதா விஜயகாந்த் - ஸ்டாலின்
பிரேமலதா விஜயகாந்த் - ஸ்டாலின்

விஜய் எங்களுக்குப் புதியவர் கிடையாது, பக்கத்து வீட்டில் இருந்தவர், கேப்டனுடன் ஆரம்பம் முதலே பழகியவர். விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

முதல்முறையாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாகச் செல்லவிருக்கிறேன், அங்கு விருத்தாசலம் மக்களுக்காகப் பேசுவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க