`கரும்புத்தோட்டம்தான் இஷ்டம்' வனப்பகுதிக்கு செல்ல மறுக்கிற சிறுத்தைகள்
TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர
நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.
இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாகத் தகவல்கள் கசிந்தன.
எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார்.

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் காலையிலேயே ஆஜராகவிட்டிருந்தனர். செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார்.
வழக்கமாக, நிர்வாகிகள் கூட்டத்துக்கும் இணைப்பு விழாக்களுக்கும் அனைவரும் வந்த பிறகு கடைசியாகத்தான் விஜய் அலுவலகத்துக்கு வருவார். ஆனால், செங்கோட்டையன் சூப்பர் சீனியர் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக விஜய் செங்கோட்டையனுக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டார்.
காலை 9:15 மணிக்கு வந்த விஜய் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் அலுவலகத்திலுள்ள அவரது அறையில் காத்திருந்தார். விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு சற்று அருகே இருக்கும் ஆதவ்வுக்கு சொந்தமான இல்லத்தில்தான் செங்கோட்டையன் தங்கியிருந்தார். ஆதவ் தரப்புதான் செங்கோட்டையனை தவெகவுக்குள் இணைக்கும் அசைமென்ட்டை கையிலெடுத்து முடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆதவ் கார் முன்பக்கம் வர பின்னால் வந்த காரில் செங்கோட்டையன் வந்தார். ஆதவ் செங்கோட்டையனை வரவேற்று அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லவே, உள்ளே விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார்.
செங்கோட்டையனுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பொறுப்பைக் கொடுத்திருப்பதாகவும் தகவல்.
















