செய்திகள் :

TVK: சமூக வலைத்தளப் பிரபல ஜோதிடர் டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; யார் இந்த கனிமொழி சந்தோஷ்?

post image

கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 22 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தலில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 957 பேர் வாக்களித்தனர்.

இதில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகளைப் பெற்ற த.வெ.க. வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் 42 ஆயிரத்து 140 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

1 லட்சத்து 4 ஆயிரத்து 326 வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இரண்டாம் இடத்தையும், 90 ஆயிரத்து 726 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சூர்யபிரகாஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதற்கு முன்பாக இந்தத் தொகுதியில் நடைபெற்ற 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றிருந்தது. அ.தி.மு.க. பலம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில், அக்கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முதல் முறையாகத் தோல்வியடைந்துள்ளார்.

முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட 37 வயதான கனிமொழி சந்தோஷ், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

கோவை நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இவர், இளங்கலை சட்டப்படிப்பு படித்துள்ளார். மேலும், ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். டைல்ஸ் மற்றும் கிரானைட் தொழில் செய்து வரும் இவர், ஜோதிடர், பிசியோதெரபிஸ்ட், வாஸ்து நிபுணர் எனப் பன்முகங்களை கனிமொழி சந்தோஷ் கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்து வரும் இவருக்கு, இன்ஸ்டாவில் லட்சக்கணக்கான பலோவர்கள் இருக்கிறார்கள். ஜோதிடம் மூலம் கேன்சரைக் குணப்படுத்தலாம் என ஒரு வீடியோவில் கனிமொழி சந்தோஷ் பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க