செய்திகள் :

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

post image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டம்
தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டம்

அந்த வகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய தவெக தலைவர் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம்.

நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்.

ஆனால், இந்த சமயத்தில் நம் மீது வன்ம அரசியல் விமர்சனங்கள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு முறியடிப்போம்.

அரசியல் செய்யவில்லை என பெயரளவில் பேசிவிட்டு, சட்டமன்றத்தில் முதல்வர் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினார் என்பதை மக்கள் உணராமலா இருப்பார்கள்?

இந்தியாவில் யாருக்கும் கொடுக்காத கட்டுப்பாடுகளை எங்களுக்கு கொடுத்தார்கள்.

தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டத்தில் விஜய்
தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டத்தில் விஜய்

நாங்கள் மக்களுக்கு வசதியாக ஒரு இடம் கேட்போம். அவர்கள் நெருக்கடியான ஒரு இடத்தை கொடுப்பார்கள். அது வாடிக்கையாகவே இருந்தது. இந்தியாவில் எந்த கட்சிக்கும் விதிக்காத விதிமுறைகளையெல்லாம் எங்களுக்கு விதித்தார்கள்.

நம்மைப் பற்றி விமர்சிக்கும் நேர்மைற்ற குறுகிய மனம் கொண்டு முதல்வருக்கு சில கேள்விகள்

இந்த கபட நாடக திமுக அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா?

அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தார்கள். அதை அவமதிப்பதை போல பத்திரிகையாளர்களை சந்தித்து பொய் கூறினார்கள்.

50 வருடமாக பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய் என்பதை நான் சொல்லவில்லை. நீதிமன்றம் சொல்லியிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க