செய்திகள் :

TVK vs CPM: ``தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை" - சிபிஎம் சண்முகம் விமர்சனம்

post image

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ``புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன் பிறகுதான் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று முதலமைச்சர் முடிவு செய்வார். மீனவ சகோதரர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

அதற்கு பதிலளித்த அவர், ``புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று தவெக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 564, முதலமைச்சருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் எவ்வாறு வெளிவந்திருக்க முடியும். முதலமைச்சர் ஒப்புதல் அளிக்காமல் அரசாணை வந்திருந்தால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் இந்த தவறான முடிவு எடுக்கப்பட்டதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி போன்ற நிரந்தரக் கட்டுமானங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பொருத்தமான மாற்று இடங்களில் அமைக்க பல வாய்ப்புகள் சென்னை மாநகரத்திற்குள்ளேயே இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர் குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு அங்கே அமைப்பது ஜனநாயகப் பண்பாகாது.

இந்த விவகாரத்தில் சிபிஎம் மக்களின் நலனில் இருந்தே கோரிக்கைகளை முன்வைக்கிறது. தவெக அரசு மட்டுமன்றி வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நியாயமான கோரிக்கையைத்தான் எழுப்பியிருப்போம். கடந்த கால தி.மு.க ஆட்சியில் பல்லாவரம் அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு, சீனிவாசபுரம் மற்றும் கே.பி. பார்க் மக்கள் பிரச்னை, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் 12 மணி நேர வேலை நேரச் சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டம் வரை பல்வேறு மக்கள் போராட்டங்களை சிபிஎம் முன்னின்று நடத்தியது.

சிபிஎம்., சண்முகம்
சிபிஎம்., சண்முகம்

ஆனால், கோரிக்கையின் நியாயத்தை விவாதிக்காமல் 'அன்று ஏன் போராடவில்லை, இன்று ஏன் போராடுகிறீர்கள்' என்று கேட்பது பிரச்னையை திசைதிருப்பும் தந்திரம். தற்போதைய த.வெ.க அரசின் அணுகுமுறை ஜனநாயகப்பூர்வமாக இல்லை. பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக அறிவிக்காமல், தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் அதேவேளையில், அரசின் தவறான கொள்கைகளை இடித்துரைத்து சுட்டிக்காட்டும் கடமையையும் சிபிஎம் தொடர்ந்து செய்யும்." என்றார்.

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” - பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். கடந்த சட்டமன்றத் த... மேலும் பார்க்க

ஸ்டாலின், எடப்பாடி முதல் சூர்யா, கார்த்திக் வரை; பிரபலங்கள் குவிந்த திருமண விழா; பின்னணி என்ன?

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளி... மேலும் பார்க்க

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிலிருந்து ஒரு சில நாடுகள் எப்படியோ தப்பித்துவிட்டாலும், சில நாட... மேலும் பார்க்க

ஸ்டார்பக்ஸ் GCC மையம்: `800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு' - தமிழக முதல்வர் ஒப்பந்தம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capabili... மேலும் பார்க்க

"கேள்வி கேட்டா பரவாயில்ல, பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது?" - தவெகவைச் சாடிய உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந... மேலும் பார்க்க